பள்ளிகளின் ரேங்க் பட்டியல் தேர்வுத்துறை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2014

பள்ளிகளின் ரேங்க் பட்டியல் தேர்வுத்துறை வெளியீடு


நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது சென்னை மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன என்ற ரேங்க் பட்டியலை தேர்வுத் துறை தயாரித்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 163 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

மேலும், நிர்வாக வாரியாக பள்ளிகள் பெற்றுள்ள சதவீதப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.அதில் சென்னை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 87.96 சதவீத தேர்ச்சியும், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 77.87 சதவீத தேர்ச்சியும், சென்னை மாநகராட்சி பள்ளிகள் 88.89 சதவீத தேர்ச்சியும், நிதியுதவி பெறும் பள்ளிகள் 90.10 சதவீத தேர்ச்சியும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 95.56 சதவீத தேர்ச்சியும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 96.13 சதவீத தேர்ச்சியும், சிறப்பு பள்ளிகள் 84.21 சதவீத தேர்ச்சியும் எட்டியுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி