மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவிதொகை சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2014

மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவிதொகை சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.


மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விரைவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அப்துல்ரஹிம் உத்தரவிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட திட்ட பணிகள் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச் சர் அப்துல்ரஹிம் தலைமையில் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அமைச் சர் அப்துல்ரஹிம் பேசியதாவது:பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்கள், கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் அனைத்து விடுதிகளுக்கும், சொந்த கட்டிடம் கட்டுவதற்கு தகுதியான நிலங்களை தேர்வு செய்ய அனைத்து விடுதிகளையும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் மாதம்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி