அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு.


மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆங்கில வழிக்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் கற்றுத்தருவதைப்போல் ஆங்கில வழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டுபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பலர், அரசு பள்ளிகளில் இருந்து சுயநிதி மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகள் பக்கம் செல்லத் துவங்கினர். கல்வித்துறை அதிகாரிகள் மூலம் இத்தகவல், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உயரதிகாரிகள் ஆலோசித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளனர்.

அதில், தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வி உள்ளது. எத்தனை பள்ளிகளில் துவக்கவில்லை? ஏன் துவக்கவில்லை? ஆசிரியர் பற்றாக்குறை குறித்து விவரம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010க்கு பின், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் பெரும்பாலானவற்றில் ஆங்கில வழிக்கல்வி இல்லை.

15 முதல் 20 ஆண்டுகளாக உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பொறியியல் மற்றும் இன்ஜினியரிங் சேர பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதை நினைவில் கொண்டு, ஆங்கில வழி கல்வியில் மேல்நிலைப்படிப்புகளை கற்க விரும்புகின்றனர். சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லாததால், வெளியேறுகின்றனர். இவற்றை தடுக்க, ஆங்கில வழிக்கல்வியை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி