தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியீடு தாமதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2014

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியீடு தாமதம்.


பிளஸ் 1 வகுப்பு, வரும் 16ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், தரம் உயர்த்தப்பட உள்ள, மேல்நிலை பள்ளிகளின் பட்டியல் குறித்த, அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாததால், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ், வரும் 12-ம் தேதி வழங்கப்படுகிறது.தனியார், மெட்ரிக்., அரசு உதவி பெறும் பள்ளிகள், பிளஸ் 1 சேர்க்கையை, ஆன்-லைன் மதிப்பெண் பட்டியலை வைத்து ஏற்கனவே நிரப்பி விட்டன. 400-க்கு கீழே மதிப்பெண் பெற்றவர்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை நாடி வருகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், 350- க்கு கீழே மதிப்பெண்பெற்றவர்களுக்கு, ஒரு சில பிரிவுகளில் இடமில்லை, என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அரசு பள்ளியையே நாடி வருகின்றனர். ஆனால், உயர்நிலை பள்ளியிலிருந்து, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய, பள்ளிகளின் பட்டியல், இதுவரை அரசால் வெளியிடப்படவில்லை. தேர்தல் உள்ளிட்டவையால், அதற்கான பூர்வாங்க பணிகளும்இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை, என கூறப்படுகிறது.

பள்ளி தொடங்கிய பிறகு, தரம் உயர்த்துவது குறித்து, அறிவிப்பு வெளியிட்டால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடும் என்பதால், பெற்றோர் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க, தயக்கம் காட்டுவார்கள். உதவி பெறும் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு பண விரையமும் ஏற்படும். இன்னும் ஓரிரு நாட்களில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. அதற்குள்ளாவது, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளின் பட்டியலைவெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி