ஓர் ஆசிரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2014

ஓர் ஆசிரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல்




ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி .ஆர். நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இதில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாராயணன்.
இந்நிலையில் இவரை சங்கீதவாடி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.அங்கு ஆசிரியர் நாராயணனை வேறு பள்ளிக்கு மாற்றக் கூடாது எனக்கூறி பள்ளியை பூட்டினர். பின்னர் ஆரணி – வாழைப்பந்தல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விநாயகமூர்த்தி, சப்– இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆகியோர் விரைந்து வந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் சமரசம்செய்ய முயன்றனர். அப்போது மாணவர்களின் பொற்றோர்கள் கூறுகையில்:– இந்தபள்ளியில் 20 மாணவர்களே படித்து வந்தனர். இதனால் ஆசிரியராக உள்ள நாராயணன், சைக்கிளில் வீடு வீடாக சென்று மாணவர்களை சந்தித்து பள்ளியில் சேர்த்துள்ளார். அதன்படி தற்போது இங்கு 280 மாணவர்கள் படித்து வருகின்றனர். இது தவிர மாணவர்கள் அனைவருக்கும் ஒழுக்கம், பணிவு, நன்னடத்தை ஆகியவற்றை கற்றுக் கொடுத்துள்ளார். இதனால் இவரை மாற்ற அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியலை மட்டும் கைவிட்டனர்.

ஆனால் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக்கூறி பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து தாசில்தார் துரை மணிமேகலை, உதவி தொடக்க கல்வி அலுவலர் புருஷோத்தமன், டி.எஸ்.பி.மணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பள்ளி திறக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

25 comments:

  1. வாழ்த்துகள் திரு . நாராயணன் அவர்களே .... உங்கள் காலடி தொடருவோம் .... நன்றி ....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பணி மென்மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
      உயர்திரு நாராயணன் அவர்களே

      Delete
  2. u r really gud teacher. we will follow u.

    ReplyDelete
  3. 👏👏👏👏👏👏

    👍👍👍👍

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ...........நாராயணன் அய்யா . தங்கள் பணி சிறக்கட்டும்

    ReplyDelete
  5. அவரின் பணியில் நாமும் பின் இணைவோம் ... நன்றி

    ReplyDelete
  6. AASIRIYAR INATHUKU KIDAITHA GOWRAVAM...

    ReplyDelete
  7. indraya vaathiyaarkal narayanan sir pondru irundhaal naadu nalam peyrum

    ReplyDelete
  8. கடவுளின் தூதுவனுக்கு சல்யூட்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. you are giving development to particular village...your state... your country.....'teacher also a social worker who is giving development to the society through his social attitude'.. i realise this from you.. sir...vazhthukkal...

    ReplyDelete
  11. VAAZHTHUKKAL SIR.....
    THANGAL VAZHIYAI NAANGAL PINPATRUVOM ENDRU VAAKKU ALIKKINDROM....

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் திரு.நாராயணன் sir,

    "Today u are the real hero sir". Really we are very proud about u.

    ReplyDelete
  13. திரு. நாராயணன் அவர்களுக்கு ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் என் பணிவான வணக்கம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. realy iam very happy to hear tis news.. govt.teachers are realy a role model for all.. it shows by mr.narayanan sir.. i hope tet2012 and 2013 qualified candidates can follow tis way.. all the best.. my hearty wishes to mr.naranayan sir.. i too increase my school strength by your way...

    ReplyDelete
  15. SIR. NARAYANAN AVARGALUKKU EN VAZHTUKKAL

    ReplyDelete
  16. Really I appreciate you Mr. Narayanan sir. Keep it up.

    ReplyDelete
  17. Great salute to Mr.Narayanan. Me too fallow his way for the students development. once again my best wishes to his great service.

    ReplyDelete
  18. ithu intha paper karankaluku kannu la padahe ,thappu panna mattum epdi than theriyumo ,,,,,,,,,,,,,,,,,ipadi news ah yum poda lamla ,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  19. Makkal theerpe Magesan theerpu
    sir ungalukku ippothey TN govt Nallsiriyar viruthinai vazhangi gowravikkalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி