பள்ளி கட்டடம் அமைக்கும் பணி: புவியியல் துறையினர் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2014

பள்ளி கட்டடம் அமைக்கும் பணி: புவியியல் துறையினர் ஆய்வு


்குன்னூர் சின்ன வண்டிச்சோலையில் புதிய பள்ளி அமைக்கும் இடத்தை புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் சார்பில் 1.92 கோடி ரூபாய் மதிப்பில் சின்ன வண்டிச்சோலை பகுதியில் உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்தும் வகையில், ஆங்கில வழி பள்ளிக்கான நவீன புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.புவியியல் துறை தொழில்நுட்ப உதவியாளர் சம்பத் தலைமையில் மண்ணியல் பேராசிரியர்கள் டாக்டர் சுப்ரமணி, சத்தியநாராயணன், ஸ்ரீதர் ஆகியோர் சின்ன வண்டிச்சோலையில் பள்ளி கட்டட அடித்தளம் அமைக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். இங்குள்ள மண் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் கூறுகையில், "இன்னும் ஒரு வாரத்தில் மண்ணின் தன்மை, கட்டடம் அமைக்கும் வழிமுறைகள் குறித்து கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்படும். அதன்பேரில் வரைபடம் அமைத்து கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி