IGNOU: B.ED,M.ED ADMISSION NOTICE. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2014

IGNOU: B.ED,M.ED ADMISSION NOTICE.

IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது.

 

2014-ம் ஆண்டுக்கான பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் படிப்புகளை வழங்கி வருகிறது. பிஎட் படிப்பில் சேர பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றிய அனுபவம் இருப்பதுடன் தற்போது பணியில் இருக்க வேண்டியது அவசியம். 
எம்எட் படிப்பில் சேர பிஎட் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் தேவை. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. பிஎட் முடித்த பிறகு 2 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் தேவை. அதோடு தற்போது ஆசிரியர் பணியில் இருக்க வேண்டும். பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். 2014-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான விண்ணப்ப படிவங்களை இக்னோ மண்டல அலுவலகங்கள் (சென்னை, மதுரை, திருவனந்தபுரம்) மற்றும் அவற்றுக்கு உட்பட்ட கல்வி மையங்களில் ரூ.1,000 ரொக்கமாக செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இக்னோ இணையதளத்தில் (www.ignou.ac.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் தலாம். இவ்வாறு பயன்படுத் தும்போது, “IGNOU” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் (ரூ.1,050-க்கு) எடுத்து, எந்த மண்டலத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டுமோ அங்கு செலுத்த தக்கதாக இருக்க வேண்டும். 

தமிழகத்தின் வட மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் சென்னை மண்டலத்துக்கும் (தொலைபேசி எண் 044-24312766) திருச்சி மற்றும் அதற்கு தென்புறம் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை மண்டலத்துக்கும் (0452-2370733) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்கோடி மாவட்டங்களின் ஆசிரியர்கள் திருவனந்தபுரம் மண்டலத்துக்கும் (0471-2344113) விண்ணப்பிக்க வேண்டும். 

மண்டல அலுவலங்களிலும், கல்வி மையங்களிலும் ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது. எம்எட் படிப்பை பொருத்த வரையில் ஒவ்வொரு மண்டலத் திலும் 35 இடங்கள் உள்ளன. பிஎட் படிப்புக்கு மண்டலத்துக்கு ஏற்ப 4 ஆயிரம், 2,500 என குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

3 comments:

  1. I m a final year UG student...still not published final year result...nan elegible ah..????pls give information

    ReplyDelete
  2. But I have 2 years experience in school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி