TET என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2014

TET என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!


அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லாதவை என்ற குரல்களும் பல ஆசிரியர்கள்,கல்விச் சங்கங்களில் இருந்து வெளிவந்தன. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவரும் வரை, இந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை. அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே குழப்பங்களும், குளறுபடிகளும் ஆரம்பித்தன.

முதல் குளறுபடியாக, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைகள் வழங்கப்படாமல் இருந்ததில் துவங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வுகள் (SET) போன்றவற்றில்கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண்களில் சலுகைகள், அவை தொடங்கியநாளிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (29-06-2014) நடக்கப் போகும் தேர்வு வரை பின்பற்றப்பட்டு வருகிறது.மாநில அளவில், ஆராய்ச்சியாளர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நடத்தப்படும் தகுதித் தேர்விலேயே இடஒதுக்கீடு பின்பற்றப்படும் போது, ஆசிரியர்களுக்கானத் தகுதித் தேர்வில் திறமை மட்டுமே முக்கியம், இடஒதுக்கீடு திறமையையும் தகுதியையும் குறைத்துவிடும் என்ற அரதப்பழசான சொத்தை வாதம் முன் வைக்கப்பட்டது.(இங்கே ஒரு கிளைச் செய்தி, இட ஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவுக்கே உரித்தான ஒரு சலுகை, இட ஒதுக்கீட்டால் இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுகிறது என்ற கூச்சல்காரர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு தகவல். ஒரு சமூகம் பல நூறு ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்டு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருந்தால், அங்குச் சமநிலையை உருவாக்க ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு சில சலுகைகள் வழங்கப்படுவதுதான் சமூக நீதி. இந்தச் சமூக நீதி உலகளவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. அமெரிக்காவில் 'சீர்திருத்தச் செயலாக்கம்'(Affirmative action அல்லது positive discrimination) என்ற பெயரிலும், positive action என்ற பெயரில் இங்கிலாந்திலும், employmentequityஎன்ற பெயரில் கணடாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவை விட இவை முன்னேறிய நாடுகளே).

இரண்டாவது குளறுபடி, முதல் முறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் குறைவான நேரம் வழங்கப்பட்டது. 150 வினாக்களுக்கு 90 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்பட்டது. அதாவது ஒரு வினாவை அரை நிமிடத்திற்குள் படித்து, அதற்கு விடையை யோசித்துவிடைத்தாளில் குறிக்க வேண்டும். இப்படி ஆசிரியர்களின் தகுதியை கண்டறிய வைக்கப்பட்டத் தேர்வு, ஆசிரியர்களின் சிந்திக்கும், செயல்படும் வேகத்தை கண்டறிவதற்கு வைக்கப்பட்டத் தேர்வாக மாறியது. நுண்ணறிவைச் சோதிக்க உளவியலாளர்கள் நடத்தும் சோதனை முறைகளில் கூட இப்படி சிந்திக்கும் வேகத்தை அளவிடக்கூடிய சோதனைகள் இருக்கிறதா தெரியவில்லை. இதுவரை இல்லாமல் போனால், உளவியல் மருத்துவர்கள்தான் இதனை முன்னெடுக்க வேண்டும்.இந்த நேரக்குளறுபடியும் கடினத்தன்மையும் வரலாறு கண்டிராத ஒரு தேர்ச்சி விகிதத்தை அந்தத் தகுதித் தேர்வில் காட்டியது. சுதாரித்த அரசு, உடனே ஒரு துணைத் தேர்வை நடத்தியது. பொருளாதாரக் கோட்பாடுகளில் ஒன்றான தேவை - இருப்பு (Demand - Supply) கோட்பாட்டின் காரணமாக ஆசிரியர்களின் சிந்தனை வேகத்தை அளவிடாமல், அவர்களின் தகுதியைச் சோதிக்கும் வகையில் அந்தத் துணைத் தேர்வு நடத்தப்பெற்றது.

மூன்றாவது குளறுபடியாக சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) என்ற பெருங்குழப்பம் விளங்கியது. ஆனால், முதல் இரண்டு தகுதித் தேர்வுகளிலும் தேவையை விட இருப்பு குறைவாக இருந்ததால் இந்தக் குளறுபடி தலையெடுக்கவே இல்லை. ஆனால், மூன்றாவதாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் (2013ஆம் நடத்தப்பட்டது) தீராத தலைவலிச் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.இதுவரையிலான குளறுபடிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருங்குளறுபடிகளை 2013ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டு இன்று வரை தீராத் தலைவலியாக இருந்து கொண்டிருக்கிறது. நேரம் ஏற்கெனவே சரி செய்யப்பட, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சலுகை மதிப்பெண்கள் இல்லை என்ற அறிவிப்போடு தேர்வு நடைபெற்றது.2013ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டத் தேர்வு முடிவுகள்நவம்பர் 5ஆம் தேதி வெளிவந்தது. விடைகளில் ஏற்பட்ட குழப்பங்கள் சரி செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் 11-01-2014 அன்று வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளும்ஜனவரி 2014ல் முடிந்தது, தமிழக முதல்வரின் பிறந்த நாள் அன்று இவர்களுக்குப் பணி வழங்கப்படும் என்று வாய்மொழியாகத் தகவல் வெளிவந்தது.மூன்று முறை நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான அறிவிப்புகளிலும் இந்த மதிப்பெண் சலுகை பற்றி அறிவிக்கப்படவே இல்லை, 2012 ஆம் ஆண்டுமுதல், 2014 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், ஆசிரியர் தேர்வு வாரியமும் விடாப்பிடியாக இட ஒதுக்கீடு தகுதியைக் குறைத்துவிடும் என்றே பல இடங்களிலும், நீதிமன்றத்திலும் வாதிட்டு வந்தனர். அடுத்த ஒரு மாத இடைவெளிக்குள்ளாகவே கல்வியாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரது நீதிமன்ற செயற்பாடுகள், போராட்டங்கள் ஆகியவை மூலமாக இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது.

இதுவரை சலுகை மதிப்பெண்கள் தகுதியைக் குறைத்து விடும் என்று வாதிட்ட அரசு, ஐந்து சதவீதம் சலுகை வழங்கப்பட்டால் 82.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற கணக்கீடுகளுக்குப் பதிலாக 82 மதிப்பெண்கள் பெற்றவர்களும் தேர்ச்சிபெற்றவர்கள் என்றே அறிவித்தது.இவ்வாறு கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை வெகு வேகமாக செயல்படுத்த முடியாத அளவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பணியாளர்கள் பற்றாக்குறை, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும், தேர்தல் நடத்தை விதிகளும் என்று பல காரணங்களால் இந்தப் பணிகள் தள்ளிப் போனது.இதற்கிடையில் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) குளறுபடி இந்தாண்டு தேர்வில் பெரியளவில் குழப்பத்தை விளைவிக்க தேர்வு எழுதி ஓராண்டு ஆகப்போகும் நிலையிலும் இதுவரை பணி நிரப்பப்படாமல் உள்ளது. அரசு அறிவித்த சிறப்பளிப்பு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையானது இதுவரை புள்ளியியல் கண்டிராத உத்திகளைக் கொண்டிருந்தது.

தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றவருக்கும் 104 மதிப்பெண் பெற்றவருக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் 42 வழங்கப்படும். ஆசிரியர் பட்டப் படிப்பில் 69.98 மதிப்பெண் பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் பன்னிரெண்டும், 70.00 பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் 15ம், 99.98மதிப்பெண் பெற்றவருக்கும் அதே 15 சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதே போலத்தான் இளநிலை பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இத்தகைய கேலிக்கூத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அறிவியல்பூர்வமாக இந்தச் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. மீண்டும் பணி நிரப்பும் பணிகள் மந்தமைடைந்தது.இவ்வாறு சிறப்பளிப்பு மதிப்பெண்களின் குழப்பங்கள் .ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அவர்களது இணைய தளத்தில் எந்த தகவலும் முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமான தகவல்களும் இல்லை. ஊடகங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தைச் சேர்ந்த முக்கியமான நபர் தெரிவித்தார், வட்டாரம் தெரிவித்தது என்றே தகவல்கள் வருகிறது. இதனாலேயே பல வதந்திகளும் உலா வருகிறது.

சமீபத்திய வதந்தி (முறைப்படி தேர்வு வாரியம் அறிவிக்காத வரையில், அது வதந்திதான்.) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதைப் போல,UG-TRB தேர்வு நடத்தப்படும், அதில் பெறும் மதிப்பெண்களில் 50 சதவீதமும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சிறப்பளிப்பு மதிப்பெண்ணின் 50 சதவீதமும் சேர்த்து பெறப்படும் மதிப்பெண்ணிலிருந்தே பணிவழங்கப்படும்.இப்படி ஒரு நடைமுறை கடைபிடிக்கப்படுமானால், அது எளிமையானதொருதேர்வை மேலும் மேலும் சிக்கலாக்குவதற்குச் சமம் ஆகும். அதோடல்லாமல், முதுநிலை ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும் தேர்வு முறையைப் போன்ற தேர்வேஎன்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு எதற்கு? முதுநிலை ஆசிரியர்களுக்குப்பின்பற்றப்படுவது போன்ற அந்த ஒரு தேர்வே போதாதா? அல்லது முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஒரு தேர்வு இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன் சிக்கலான இரண்டு தேர்வு? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இதுவரை வெளிவந்த மூன்று அறிவிப்புகளிலுமே எத்தனை பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது அறிவிக்கப்படவே இல்லை. தேர்வு எழுதப் போகும் தேர்வர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அரசும், தேர்வு வாரியமும் நினைக்கிறதா? அல்லது அவர்களிடமே அந்தத் தகவல் முழுமையாக இல்லையா?இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகளையும் இதே தகுதித் தேர்வை எழுத வேண்டும், என்ற குளறுபடிகள் தாண்டவமாட, அவர்களுக்குத் தனியாக சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதே போல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களுக்கானத் தேர்வுகளும் குளறுபடியும் ஓராண்டாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேதியில் அதிகமான நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு துறை கல்வித்துறையாகத் தான் இருக்கும். கல்வித்துறையில் இத்தகைய குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதிமன்றப் படியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் இத்தனை வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது கல்வித்துறை. இத்தனை வழக்குகளை எங்களால் கையாளமுடியவில்லை, அத்தனை வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்கும் படி ஆசிரியர் தேர்வு வாரியம் கோரும் அவல நிலையும் ஏற்பட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அண்டை மாநிலங்களில் பெருமளவு குழப்பம் இல்லாமல், நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, ஏன் தமிழகத்தில் மட்டும் இத்தனை குழப்பமான சூழ்நிலை நிலவ வேண்டும்? பதில் மிகவும் எளிமையானது.

தேர்வுக்கான நெறிமுறைகள் தெளிவாக வகுக்கப்படாமையே ஒரே காரணம்.இந்தியாவிலேயே முதன்முதலாக போட்டித்தேர்வுகளுக்கான வாரியத்தை அமைத்த மாநிலத்தில் இத்தகையதொரு நிலை என்பது உண்மையிலேயே வேதனைதான். ஆசிரியர் தேர்வு வாரியம், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், வினாத்தாளை வடிவமைக்க எப்படி ஒரு குழு அமைத்துச் செயல்படுகிறதோ அதே போல,தேர்வு நடத்தும் முறைகளையும், பணி நியமன முறைகளையும், சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்கான முறைகளையும், ஏனைய வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைக்க ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து மீண்டும் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அடியொட்டி தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் இத்தனைச் சிக்கல்கள் இல்லாமல்இருந்திருக்கும்.தேர்ச்சி பெற்று பல மாதங்களாக பணி கிடைக்காமல் தேர்வர்களும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிப்பட வேண்டிய நிலையும் இருந்திருக்காது. ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஊதியம் இல்லாமல், ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களை சேவை செய்ய வருமாறு அழைக்க வேண்டிய கட்டாயமும் இருந்திருக்காது.

ஆசிரியர் தேர்வு வாரியமும், அரசும் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்காததின் விளைவு, தேர்வர்கள் நீதிமன்றங்கள் மூலமாக இந்தவழிகாட்டு நெறிமுறைகளை அமைக்க உதவிக் கொண்டிருக்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கியது, சிறப்பளிப்பு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்பட வேண்டும், சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கும் முறை என்று எல்லாவற்றையும் நீதிமன்ற உத்தரவின் நூல்பிடித்தே அமைக்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்களில் பிரச்சினைகள் என்றால், அதனை முற்றாகத் தீர்க்க இற்றைப்படுத்தல்களைச் செய்யாமல், பேட்ச்கள் (Patch) எனப்படும் ஓட்டை உடைசல்களை அடைக்கும் வழிமுறைகளையே செய்வார்கள். அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காமல் நீதிமன்ற உத்தரவுகளையே பின்பற்றி வருகிறது.கல்வியாளர்கள் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து, ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவை கட்டாயம் பின்பற்றும் படியும், தேர்வு முடிந்த குறிப்பிட்ட காலவரையறையில் பணி நிரப்புதல் செய்யப்பட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை வாரியம் செயல்படுத்தும் படி செய்ய வேண்டியதுதான். அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்களை நீதிமன்றஉதவியோடு கல்வியாளர்களாகிய நாமே செய்ய வேண்டியதுதான்.

164 comments:

  1. It is better than to conduct ug trb exam.Fix thecutoff then give posting

    ReplyDelete
    Replies
    1. Innum 6 maatham thaamathmaagum paravaa illaiyaa ANDAVAREEEEEEEE........

      Delete
    2. Tet2013 frnds anaivaru ondru sernthu udanea velai kodu nu tamilnaadea therumbe paarkum alavuku poraatam nadathenaal mattum dha entha govt namaku velai kodukkum

      Delete
    3. இத்தனை குளருபடிகளுக்கும் காரணம் யார் கல்வி அமைச்ச்ர் மாற்றப்பட்டிருக்கிரார்,TRB தலைவர் மாற்றப்பட்டிருகிறார் ஆனால் கல்விதுறை முதன்மை செயலார் மட்டும் மாற்றப்படவில்லை TRB கல்விதுரையின் முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு துறை தான் இதை எல்லாம் பார்க்கும் போது இதை எல்லாம் பார்க்கும் போது அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பு முத்ன்மை செயளாலரே எல்லாவற்றிலும் மாற்றம் செய்யும் முதலமைச்ச்ர் கல்விதுறையின் தலைமயில் ஒரு மாற்றம் செய்து அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு காண் வேண்டும் என் ஆண்டவனை 75000 tet பாஸ் செய்தவர்களும் பிரார்திப்பதை தவிர வேறு வழியில்லை ஏனென்றால் கல்விசெய்தி தவிர நமது குமுறலலுக்கு செவிமடுக்க யாரும் இல்லா நாதியற்றவர்களாக் நாம் உள்ளோம்

      Delete
  2. . நன்றி கல்விச் செய்தி.

    ReplyDelete
    Replies
    1. TODAY G.K
      • உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)
      • உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)
      • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
      • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

      Delete
    2. இத்தனை குளருபடிகளுக்கும் காரணம் யார் கல்வி அமைச்ச்ர் மாற்றப்பட்டிருக்கிரார்,TRB தலைவர் மாற்றப்பட்டிருகிறார் ஆனால் கல்விதுறை முதன்மை செயலார் மட்டும் மாற்றப்படவில்லை TRB கல்விதுரையின் முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு துறை தான் இதை எல்லாம் பார்க்கும் போது இதை எல்லாம் பார்க்கும் போது அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பு முத்ன்மை செயளாலரே எல்லாவற்றிலும் மாற்றம் செய்யும் முதலமைச்ச்ர் கல்விதுறையின் தலைமயில் ஒரு மாற்றம் செய்து அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு காண் வேண்டும் என் ஆண்டவனை 75000 tet பாஸ் செய்தவர்களும் பிரார்திப்பதை தவிர வேறு வழியில்லை ஏனென்றால் கல்விசெய்தி தவிர நமது குமுறலலுக்கு செவிமடுக்க யாரும் இல்லா நாதியற்றவர்களாக் நாம் உள்ளோம்

      Delete
    3. today yarum fake news konduvarala oru naal pavi aduthu priya .today yar ? vangada vangada ............... trb vaya thorakkala avanga thoranthutta matthavanga moodiduvanga

      Delete
  3. கனவுகளை கல்லறைகளாக்கிய TRB க்கு நன்றி

    ReplyDelete
  4. சரியான திட்டமிடல் இல்லாதது அரசு இயந்திரம் செயல்படாதது செயல்படாத கல்விஅமைச்சர் கண்டு கொள்ளாத கல்வித்துறை தற்கொலைமுடிவில் தேர்வ்ர்கள் வாழ்க தமிழ்நாடு

    ReplyDelete
  5. இந்த குழப்பங்கள் எல்லாம் தீர்கபடுமா ???? இல்லை தீர்கபடாத தொடர்கதை ஆகிவிடுமா ??

    ReplyDelete
    Replies
    1. Ithu Sun TV serial pola poikitte irukkum mudium aana "MUDIYTHU"

      Delete
    2. Usha Madam Anaivarum poraadaamal kulappam theraathu porada neenga ready ya sollunga naan ready

      Delete
  6. ஏற்கனவே நடந்த டெட் 1 & 2 ல் இட ஒதுக்கீடு படி பணி நியமனங்கள் நடைபெற்று இருந்தால் உங்களின் ( UR,BC,MBC } ன் இடங்கள் உயிரோடு இருந்து இருக்கும் .... 

    கடந்த டெட் களில் பாஸ் செய்த அனைவரையும் இட ஒதுக்கீடு பின்பற்றிடாமல் பணி நியமனம் வழங்கியது மாபெரும் தவறான செயல்... 

    அன்பு நண்பர்களே ...முன் வந்த பிள்ளையார் (UR,MBC,BC} பழத்தை எடுத்து சென்றுவிட்டார்கள் .. உங்களை முருகனாக்கியது ( ஆ## ) அரசு .... இப்போது புரிந்ததா .... இட ஒதுக்கீடு இல்லையெனில் என்ன நடக்கும் என்று ..

    ReplyDelete
  7. elam poju friends manasey sethu poju. sir matric scla kuda chance ila sir 3yearsa work panen tetla pasa agaum anupitanga.enaku patha. ponnu kuda reject aiduju sagalam pola iruku

    ReplyDelete
  8. problem started on relaxation of 5%

    ReplyDelete
    Replies
    1. No sir first problem in answer keys so that only so many cases filed and delayed the processing finalresults.last year all process completed in 18 days these delayed process paved the way to relaxation

      Delete
  9. Posting-a arivi...!
    Pani niyamanam sei...!
    TNGOVT and TRB...
    SAME OF YOU...!

    ReplyDelete
  10. அருகிலுள்ள மாநிலங்களை பார்த்து அதனை காப்பி அடிக்க கூட தெரியாமல் தவிக்கிறது தமிழகம் ... இவர்கள் தெரிந்தே தவறான பாதையில் நம்மை கூட்டி செல்கின்றனர் .... நம்மை எலிகளாக்கி மலை உச்சிக்கு அழைத்து செல்கின்றனர் .....

    ReplyDelete
  11. TRB has done another mistake. They consider all PART I,II,III,IV,NSS,NCC marks for calculating weightage for Degree. This is against general practice in simialr exams. Even it is not too-late. The TRB is having all our degree certificates. They may re-calculate the degree weightage considering only major subject marks.

    ReplyDelete
  12. அருகிலுள்ள மாநிலங்களை பார்த்து அதனை காப்பி அடிக்க கூட தெரியாமல் தவிக்கிறது தமிழகம் ... இவர்கள் தெரிந்தே தவறான பாதையில் நம்மை கூட்டி செல்கின்றனர் .... நம்மை எலிகளாக்கி மலை உச்சிக்கு அழைத்து செல்கின்றனர் .....

    ReplyDelete
  13. Replies
    1. Welcome ganga mam. Dharshini haarathyngurathu yaru mam....????

      Delete
    2. hello ganga wish u all the best why u not calling in cell

      Delete
  14. Epathanya posting poduveenge?ipdiye case podaruthuku vasathi vaaippu yarpaduthi kodukara oru govt ment tngovt mattumthan.

    ReplyDelete
  15. போங்கப்பா போய் வேலைய பார்க்கலாம்.
    உங்க பூசாரி வேலையும் வேண்டாம்.
    உங்க பொங்க சோறும் வேண்டாம் ........>>>>>>>

    ReplyDelete
  16. Good article better publish in puthiya thalaimurai magazine

    ReplyDelete
  17. நண்பர் V S P வேண்டாம் ...
    தயவுசெய்து வேண்டாம் ......

    ReplyDelete
  18. Very good sir
    I think that this article has been written by Mr.maniyarasan
    Very good

    ReplyDelete
    Replies
    1. tngovt ku votu than mukiyam athan intha relaxation

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  19. ram sir ivargal kooruvathu 100% thapana thagaval another one time exam result cv posting itharku epadium one year agum pls yarum feel panna vendam

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் ஒரு தேர்வு என்பதை நான் நம்ப வில்லை .. ஆனாலும் குறைவான பணியிடங்கள் என்பதே அனைவரின் மன வருத்தம் ...
      இதை விட பெரிய கொடுமை என் 09.16 பதிப்பில் உள்ளது ..

      Delete
  20. ம் ம் ம். எல்லா கோட்டயும் அழிங்க நான் மொதல்ல இருந்து விளையாடுரேன்

    ReplyDelete
    Replies
    1. Marupadium vilaiyandu 1year's wait panunuma....?

      Delete
  21. ha..ha... mudinthatha aaaaasaigal?????

    ReplyDelete
  22. jully month nam ethirpartha appointment kidaikum atharkul case potu case potu ellathaum oruvali panranga thiru kasinathan thalamail 16 per case file pani irukanga avargal stay vanga try panuvathagavum kelvi paten pls yarathu detail solunga

    ReplyDelete
  23. government know what to do when to do. we are doing as a ordinary citizens if it is beneficial to us we are appreciating if it is not so we are cursing . first we should change that attitude . if we are purchasing a pen we should think in what way it is helpful think of posting with out beneficial to the government how they will provide job. they have planned for the state legistative election .so that the government delaying the process .without any announcement in assembly no possible for posting .

    ReplyDelete
  24. JOVI ARUTCHEZHIYAN

    Kanni Theevayavthu Thina Thanthila Parthudalam Polarukku Intha T



    JOVI ARUT CHEZHIYAN S

    Adappaavigala Kanni Theevukku kooda mudivu undu intha TET job ku Mudive illada saamy.eeeeee


    ReplyDelete
  25. Dear frnds plz thayavu seithu thavaraana news sollaathergal. Ungaluku at hu velaiyaataga erukkalaam but polar ethu mattea vaalkkai ena nambikondu erukkeraargal

    ReplyDelete
  26. amamam dailyum TRB website pakkarathu yallaruikkum daily mukiyamana valaya irruku, thukkam illama, sariya sapedama, fmly kuda sariya time spent pannama intha TET pathina news pakkarathuthan main work ka iruikku yanna pannarathu innu than theriyala..,

    ReplyDelete
  27. tamil major elam ena sir pavam senjanga.posting 20000 totala sonanga athum ilama poju posting koraira nala than pblamey. 9787880334

    ReplyDelete
  28. Full and full politics...
    Govt naenaicha edhu venalum seiyalaam....
    Ex:
    2012 tet exam....result % very low...udaney supplementary ...within 1 month counceling...
    First announced only 5000 paper1... but pass aana ellorukkum posting... eppadi APPA mattum mudinchadu..

    ReplyDelete
  29. Education ministernu oruththar irrupaarae ennaiya panraru.....

    ReplyDelete
  30. yaruku theriyum nalaike kuda trb office vasalil NO VACCENCY board vachalum vappanga

    ReplyDelete
    Replies
    1. sariya sonninga sir... ketta tamil naattu govt athigaaraththukku utpattathnnu judge solluvaaru......

      Delete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. Today Sathis and maniyarasan command kanom y?

    ReplyDelete
  33. what think you selction list no,final list no,vaccency list no,job no,marriage no..........

    ReplyDelete
  34. adutha tet advertisement vittu innum konjam KALLA PETTIYA ROPIKONGA

    ReplyDelete
  35. ENDHA VISAYATHAYUM PLAN PANNI PANNANUM.PLAN PANNI PANNALANA IPPADITHAAN OK........................
    MASTER NEXT
    NEXT REST THAAN(TRB))

    ReplyDelete
  36. Dear teacher friends, I'm really ashamed of ur unity... Ur comments well portrays ur selfishness... First stop this. Think for others, help for ur seniors, think for people come in future don't loose ur brain and valuable unity for bone piece govt puts like animal.

    ReplyDelete
  37. indru poi nalai vaa kadhaidan trbin seyal

    ReplyDelete
  38. இந்த கட்டூரையை அனைத்து செய்தித்தாள்களிலும் வெளியிட்டால் தெரியும் TRB ன் இயலாமை. தமக்கென ஒரு வரையறை இல்லாத அமைப்பு போல் தடுமாறுகிறது . யாரேனும் அதை கரையேற்றுங்கள் தோழர்களே..

    ReplyDelete
  39. Dont worry frnds
    Ethu natakkumo athuthaan natakkum
    Ennathaan ennaiya(oil) udampu fulla thadavittu kadal mannil baduthu urundalum voddura mann thaan voddum
    Athigamaka ethirpakkathirgal blood pressure athikamakum

    ReplyDelete
  40. அதிகாரப்பூர்வமாக அறிக்கை வரும் வரை அனைத்தும் வதந்திகளே .. பொறுமை காப்போம் ...

    ReplyDelete
  41. ஆசிரியர் தகுதி தேர்வும் ,ஆசிரியர் தேர்வுவரியமும் .
    1.முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக கடந்த ஆண்டு 2013ல் அறிவிப்பு வெளியிடபட்டது அதில் மொத்த காலி பணியிடங்கள் எவ்வளவு என்றும் பாடவரியகவும், சாதி வரியாகவும் தெரிவிக்கபட்டது, ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மட்டும் என் இது போன்ற அறிவிப்பு வெளிபடையாக இல்லை ?.
    2.பழைய வெய்டேஜ் முறை உயர் நீதிமன்றதால் ரத்து செய்யபட்டுள்ளது, தகுதி தேர்வு என்பது ஒரு திறமையான ஆசிரியரை தேர்ந்தேடுபதர்காக நடத்த படுகின்றது ஆனால் இத் தேர்வை நடத்தும் தேர்வுவாரியம் திறமையான குழுக்களை கொண்டுள்ளத ? ஆம் எனில் என் இது போன்ற மட்டமான வெய்டேஜ் முறையை பரிந்துரைத்தது ?
    3.ஒரு நல்ல நீதிபதியை உருவாக்கு வது ஒரு திறமையான ஆசிரியர்தான் , ஆசிரியரை தேர்வு செய்யும் இவ்வாரியம் எப்படி இருக்க வேண்டும் ?
    4. UGCயின் கிழ் நடத்தப்படும் தேர்வான NET மற்றும் SET தேர்வின் வினதாளில் இதுவரையில் எதாவது பிழை இருந்ததுண்ட ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடைசியாக நடத்தபட்ட TET வினாத்தாளில் எத்தனை பிழைகள் ? வினாவுக்கான பதில்களில் பிழைகள் இருந்தால் பரவ இல்லை வினாவிற்கு சமந்தமே இல்லாத நான்கு விடைகள் உள்ள கேள்வியை நிக்கிவிட்டு மதிப்பெண் வழன்கிரங்கள் .

    ReplyDelete
  42. அனைத்து பத்திரிக்கைகளுக்கும் இந்த கட்டுரையை அனுப்ப mail id யாருக்கும் தெர்ந்தால் கொடுக்கவும் அனைவரும் அனுப்பலாம்

    ReplyDelete
  43. tet ikku mattuma intha nilamai pg trb ikumdhan july21 vandal oru varudam mudiyapoguthu. innum final list vidavillai

    pg trb friends pl all are wish to trb for first year celebration wishes through telephone on july 21

    ReplyDelete
  44. trb meethu podapadum case enna criminal case aa ? varuda kannakil illukuthu . fast aga case miduthu final list vedungal

    ReplyDelete
  45. Special tet la pass paniyavarkuluku thani vacant iruka illa namaloda mingle pani poduvangala pls yarathu therinthal sollungal jaya priya sonna thagaval 90% varai unmaithan irunthalum adutha lust eduka vaipu ullathu

    ReplyDelete
  46. hello jana sir and hari sir unga comment a ngt pakkala sir jana sir neenga busy a irupinga athan cl panrathu illa sir hari sir saidharshini saihaarathy enoda kullanthaikal name sir special tet vacancy nama vacancy oda add pannuvangala pls sollunga sir

    ReplyDelete
    Replies
    1. Kandipaga avargaluku thaniyaga than yellam nadakum miss. Anna avaragaluku othukka padum paniyidangal namidam irundu senravaigal. For ex: history pada pirivi 2012 il 3270 ithil ippothu namaku othukka pattathu 3119 matume. Engiya paniyidangalum matrum athan piragu yerpatta paniyidangal than spl tet matrum promotionnuku kodukkappanum enru ninaikiren.....

      Delete
  47. TET 2013 - முதல் கோணல் முற்றிலும் கோணல்.

    TET 2013 - திட்ட விளக்க அறிவிப்பு (PROSPECTUS) ன் படி தேர்வு நடத்தி, மதிப்பெண் சரிபார்ப்பும் முடிந்து, பணிநியமனம் வழங்கும் நிலையில், திட்ட விளக்க அறிவிப்பை (PROSPECTUS) மிறுவதால் வந்த குளறுபடிகள் எத்தனை.

    ஒரு சில அமைப்புகளின் நிர்பந்தம், அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் தேர்தல் குறுக்கீடு, ஆகிய காரணங்களால் அரசே தன் திட்ட விளக்க அறிவிப்பை (PROSPECTUS) மீற வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப் பட்டு, எல்லாம் முடிவடைந்த நிலையிலும் கூட மதிப்பெண் சலுகையை அறிவித்தது. அதன் காரணமாக யாரும் பதிக்கப்படவில்லை என்று நிருபனமாகி, அரசாங்கத்திற்க்கு எல்லாம் அதிகாரங்களும் உண்டு என்றும் இது அரசின் கொள்கை முடிவு என்றும் நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

    TET 2013 - ன் தெளிவில்லாத வழி காட்டுதலால் எண்ணிலடங்காத இன்னல்களை ஆசிரியர் மற்றும் TRB யும் எதிர் கொள்ளவேண்டிய சூழல், மற்றும் சொந்த விறுப்புகளுக்கு ஏற்றவாறு அரசாங்க ஆணையை மாற்றிக்கொள்ளலாம் என்று அனைவரையும் நினைக்க தூண்டுகிறது. ஏனனெனில் TET 2013 - முதல் கோணல் முற்றிலும் கோணல். இதே அரசும் திட்ட விளக்க அறிவிப்பு (PROSPECTUS) படி எல்லாம் நடத்தியிருந்தால் இத்தனை இடியாப்ப சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

    இந்த கோணலை யார் நேராக்குவது, புரியாத புதிராக உள்ளது. நல்லதே நடக்கும் என்று பொறுமையுடன் காத்திருப்பதை தவிர வேறொன்றும் யாம் அறிவோம் பராபரமே.

    ReplyDelete
    Replies
    1. அரசு தனது தவறுகளை ( இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்காதது) திருத்தி கொண்டது ... ஆனால் கால தாமதமாக ... அது தான் வினை.
      அரசுக்கு போட்டியின் நடுவில் மாற்றம் செய்ய உரிமை உண்டு என நீதிமன்றத்தில் நிரூபித்து விட்டது... எத்தனை முறை மேல் முறையீடு செய்தாலும் அரசே வெல்லும் என நம்புகிறேன் .....

      Delete
    2. எந்த கேஸ். When? Where? Chennai or Madurai?

      Delete
    3. எதற்கு கேட்கின்றேன் என்றால், இனி வரும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா?

      Delete
    4. மதிப்பெண் சலுகை வழங்க பட்டதை எதிர்த்து பெஞ்ச் கோர்ட் / சென்னையில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது ...
      நண்பரே நீங்கள் டெட் தேர்வரா ??

      Delete
    5. Yes Mr.Ram. I am TET 2013 Eligible Candidate. Paper I = 108 and Paper II = 101.

      Delete
    6. Ram sir enthe case potu niraya nall akiratu allava.ennum hearingku varavilliya? Ann?

      Delete
    7. நித்யா மேடம்... கோர்ட் கொடுத்த 4 வாரங்கள் கடந்த 9 ஆம் தேதியோடு முடிந்தது ... நமக்கு புதிதாக ( (அனேகமாக UUG-TRB } எனும் ஆயுதத்தை பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது ...

      Delete
  48. UGTRB vaikkrathellam appoinment iluthadikkra velai innum 2 year eluthuruvanga so weightage base la job podundanu porattam seyvom weighting la varavungalukku next year la salugai mathippen kodukka solvom. Viruppa pattavunga improvement exam eluthatum apdinu poradinalthan vali pirakkum ilana nama padisu pass panathellam west aagidum ugtrb vanthal tet ethukku ithellam kanneer thudaippu velai job 5 yearkku aparamthan kidaikkum...

    ReplyDelete
  49. Next week Friday selection list.......
    Its 100% confirmed news.

    ReplyDelete
    Replies
    1. 82 mark eduthukitu nanga irukkom engalukku varathunu therinja court la case pottu job podama iluthadippom it is true. Engalayum govt pass pottu irukkula engalukku velai venum

      Delete
    2. how many conform news ? trb what are u doing? ennga children schoola join pannitu fees ikum dress books innu thavana solluran, ennga posting poduvanga fees 30000 thousand waste agumo? dought la june ran away. eppa july.........? eppathan poduvinga? pass panna nanga savarathvita job poda theriyatha neega trb sagunkada.
      kalvi amaicher down ^1000000000 down.

      Delete
  50. Today list 10 pa trb jus call panen. Lady sonanga

    ReplyDelete
    Replies
    1. Mr.Anand, Not clear on your comment...

      Delete
    2. en sir PURALI KILAPI RENAKALAM aakuringa, TRB MADAM also COMPUTER

      VOICE PROCESS la irrukunu.

      Delete
    3. pavi,jaya priya aduthu(today) fake newser sathishkumar and anand. ivangalta yar sonnathunu kelunga "education department athikarinu" solvanga

      Delete
  51. Today rank or selection list vidiranga it is confirmed news

    ReplyDelete
    Replies
    1. Innum ethanai naalaikku than ippadiye "innaiku", "innaiku" nu news varumo?
      Ethanaiyo "innaaiku" poiruchu... But no end...

      Delete
    2. TODAY NAAN CALL PANNATHARKU NEXT MONTH PAARUNGANU

      SOLLITU vachitaanga. PLZ yaarum RUMOURS pannathinga.

      Delete
  52. today list vara vaipae ellai,apadiyae vanthalum ithu final ella,innum special tet cv mudila..+2 weightage case pending,b.ed seiniority case pending..FINAL AND POSTING AUGUST OR SEPTEMBER ONLY..

    ReplyDelete
  53. today list vara vaipae ellai,apadiyae vanthalum ithu final ella,innum special tet cv mudila..+2 weightage case pending,b.ed seiniority case pending..FINAL AND POSTING AUGUST OR SEPTEMBER ONLY..

    ReplyDelete
    Replies
    1. All tet passed candidates, nobody is going to know our pain... Each and every candidate's family is in trouble in different ways... Is this that much big sin - passing TET? This is very Poor, poor, poor..... administration. I pray God to bring at least peace of mind to you all... even the posting is getting delay...

      Delete
  54. YARUM VARUNTHA VENDAM SAGOTHARA SAGOTHARIGALAE...niochayam posting athigama poduvanga..5% kuduka mudiyathunu sonnanga but kuduthanga..athanal pala kudumbangal santhosamaga ullathu..athu pol kadavul manasu vaipar..tet pass aanavaga neraiya perku kandipa job kidaikum..namaku EAENA THAGUTHI ELLAI?5 LATCHAM PERAI THORGADITHU THAN 82 KU MEALA EDUTHI IRUKIROM..NAM 100 IL ORUVAR THAN PASS..NAM AANAIVARUKUM JOB KIDAIKUM..ELLANA ONRU PATTU PORADUVOM..

    ReplyDelete
    Replies
    1. என்னது மறுபடியும் போராட்டமா ??? அய்யயோ....

      Delete
    2. anbarasu anbu sir job kidaikudho illayo unga positive words AARUDHALA IRRUKU thanks

      Delete
  55. Just now I called Trb
    No list today
    But no ug trb

    ReplyDelete
  56. Dear friends

    Don't Expect Today

    Already i have mentioned day before yesterday.
    Vacancy are same today also i got news,

    But

    final list is there in the Edu. dpat sect.

    one Plan

    Now they are discussed about the TRB- UG exam whether its conducted or not, because of they have got a notice from Court.( experience and seniority ).

    If may be decided UG TRB Exam ,they have to plan to given marks UG-TRB (110 sub+30 Edu .psy+10 Edu.GK+(3 exp+4 seniority)- it will converted into 50%, then TET converted in to 50%

    Totally out of 100 cutoff released.

    but some body told

    next plan

    Don't conduct UG-TRB Exam already time over

    we will release a final list as per the Court method

    my relative says ,which one is decided I don't know ,

    But again he says, it will decided before 2nd July.

    whether I plan is decided , wt.marks only (not final list) released 3rd or 4th July, II plan is decided final list will be released 3rd or 4th July.

    This is also confidential.

    I have share the news only from get official

    don't angry with me friends


    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Dear Ms.Jaya priya, Thank you for sharing the news..
      If UG-TRB is not conducted, is there any chance for Paper-II Physics - Weitage-65.04 - Female - BC - Tamil medium... Awaiting your reply...

      Delete
    3. If trb exam conduct for paper2 means what method will follow. For paper1 is there any subject. Related. For paper 1???

      Delete
    4. jayapriya mar pap1 க்கு என்ன மேடம் வண்ணுவாங்க ? plz கேட்டு சொல்லங்க rply mam

      Delete
    5. UG ~TRB பாட திட்டம் வகுத்து விட்டார்களா ?? அது எந்த வலைத்தளத்தில் உள்ளது என தெரிந்தவர்கள் இங்கு பதிவிடுங்கள் ...

      Delete
    6. www.trb vaipom aana vaika matom vaithalum final list vida patthu varusam agum.com

      Delete
    7. திரு.ராம் ராம் அவர்களே..

      பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வருமா வராதா என்ற விவாதம் இனி தொடர வேண்டாம்.

      ஆனால் கடந்த 2001‍‍‍‍‍ முதல் 2012 வரையில் நடைப்பெற்ற போட்டித் தேர்வுகளான அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் தேர்வு, வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு (BRTE)மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர் தேர்வு(AEEO) போன்றவற்றில் வகுக்கப்பட்ட பாடதிட்டம் ஒரேமாதிரிதான்.

      உதவி தொடக்க கல்வி அலுவலர் தேர்வுக்கு(AEEO)மட்டும் UG TRB உறுதியாக வரும். ஆனால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்திலும் பாடவாரியாக ஒற்றை இலக்கத்திலும் இருக்கும்.


      UG TRB பாடதிட்டத்திற்கான இணைப்புத்தளம், (இதன்பிறகு வரும் (AEEO) தேர்வுக்கு மட்டும்)

      http://trb.tn.nic.in/AEEO11/27102011/Syllabus.pdf

      Delete
    8. Thank u for ur valuable news.Pls update if you know about PG TRB.WHEN WILL THEY PUBLISH PG FINAL LIST.

      Delete
    9. திரு.இராமன் அவர்களே...
      தகவலறிந்தால் நிச்சயமாக‌ பதிவிடுகிறேன்.
      நன்றி!

      Delete
    10. நன்றி நண்பர் பாரதி அவர்களே ..
      UG. TRB வரும் என நினைக்கிறீர்களா ???

      Delete
    11. நண்பர் திரு ராம் ராம் அவர்களே..

      AEEO தேர்வுக்கு வரும். ஆனால் *பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு வராது.

      *- (அரசின் விதிமுறைக்கு உட்பட்டது)

      Delete
    12. I am Sasi Krishna Moorthy , My Wife is waiting for TET Results . I Closely Watching Kalviseithi in Jaya priya .Jaya priya is creating Panic for the Teter's . Most of the Tet Candidates is from the Village side , They are Unemployment , Poverty is there ,lot of Poor's candidates are there . News Given by Jaya Priya is True or False it deost not Matter , If she continue her attitude means Many TET Candidates are going to die due to Mental Depression and Heat Attack !!!!! So , I Request Jaya priya Please Shutup Your Mouth . Selling Government Question Paper is Offence , Announcing Government Result also an Offence .All the Candidate are educated they are all know to obey the Government Rules and Regulations . If Some bad Thing Will Happen to Human Life due to your Comment (Jaya priya ) Definitely you put in the Jail .

      Delete
    13. I Request Jaya priya Please Shutup Your Mouth

      Delete
    14. JAYAPRIYA அவர்களே நீ்ஙகள் யாரிடம் இருந்து தகவல் பெற்றீர்கள் ஏனெனில் பலர் உங்கள் தகவலை வித்தியாசமாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்
      நானும் தங்களின் plan 1 plan 2 என்ற தகவலால் தான் இங்கு தகவல் பரிமாற வ‌ந்துள்ளேன். தயவு செய்து உண்மை தகவலை பதிவு செய்யவும்
      என்னை போன்றவர்கள் மிகவும் trb செயல் மீது கோபத்தில் உள்ளோம்

      Delete
    15. Very Important News About TET ( Jaya Priya )

      Today Jaya Priya is Going to USA to Meet Mr.Barack Obama to Discuss Regarding TET . She Will Return Next Week to India and Announce Further TET News !!!!!!!!!!

      Delete
  57. Ug trb vaika kudathu,ivlo nal iluthadichutu ippa thidirnu sonna enna artham innum 2yrsku posting podama iluthadikava

    ReplyDelete
    Replies
    1. dont worry madam 100% 2013 tet ku trb vaika mudiyathu vaika matanga..may be 2014 tet ku vendumanal varalam..onnu court method or b.ed seniority or posting athigam poduvanga ithu august or september kandipa nadakum nadakum..

      Delete
  58. Jayapriya mam what about pg? Please tell me

    ReplyDelete
  59. Dear Ms.Jaya priya, Thank you for sharing the news..
    If UG-TRB is not conducted, is there any chance for Paper-II Physics - Weightage-66 -MBC - Awaiting your reply...

    ReplyDelete
  60. Dear Ms.Jaya priya, Thank you for sharing the news..
    If UG-TRB is not conducted, is there any chance for Paper-II Physics - Weightage-66 -MBC - Awaiting your reply...

    ReplyDelete
  61. Jaya priya mam ,What about pg...
    When will the pg final list pls ..pls..
    reply..mam

    ReplyDelete
  62. FINAL LIST or UG TRB ?
    Why you People decided this much Fast..?

    Take More Time...

    Unga kitta innum Neraya Ethir Parkurom
    To My Knowledge THUGLAQ is Better

    After UG-TRB..Then What ????? Another Weightage

    Then Why TNTET...

    To See the Brilliance of the Question Setters ??????

    Simply UG TRB would have sufficed...?

    ReplyDelete
  63. jaya priya therinjatha sollitanga apuram en avangala tholla panringa .she s not working in trb

    ReplyDelete
  64. Enpa PG trb ke Oru exam than.. ... Ug mudichuvanuku mattum innum 7 exam oh..... Stupids... .. .

    ReplyDelete
  65. Trb member arvo hi said today u can expect otherwise next Friday got given approval of court method. So no up trb official news got from trb member just now

    ReplyDelete
  66. ok hari sir jaya priya ippa ethu nadaka chance athigam

    ReplyDelete
    Replies
    1. Nichayamaga ug trb vaikka 100% vaipu kidaiyathu miss. Appadi vaikka nenaithal govt and trb ready to face thousands of causes against that method. So, jaya mam sonnamathiri 3rd and 4th we wil expect the final list.

      Delete
  67. july 15th only posting so don't belive rumours

    ReplyDelete
  68. Its better to conduct UG TRB as done in the previous Years. Then we can get quality teachers subject wise. There won't be any problem in this method. as the syllabus for concern subjects are same in their subjects(Major)

    ReplyDelete
  69. hello friends don;t be enter what is in your mind

    ReplyDelete
  70. UG TRB NU BOOTHATHA KELAPPIVITATHU YAR?

    ReplyDelete
    Replies
    1. May be a Psycho or a Saddist ( or Both in One Person )

      Delete
  71. IS THERE ALL EDUCATED WHAT IS GOING ON THEY WANT TO KNOW OUR PULSE

    ReplyDelete
  72. 2012 TET la irunthu govt postingnu iruntha private school work yum vittutu more than 2 years lifea waste pannitu kathuiruntha ithayum solluvanunga innumum solluvanunga.

    nanbargale anaivarum kural kudunga against the TRB. ILLANA MUTTAL THANAMA ANTHA MUDIVAYUM EDUTALUM EDUPPANUNGA

    ReplyDelete
    Replies
    1. If UG TRB Means.... 2012 Selected Persons will be Called off ? ? ?
      They Got Appointment in the Weightage Basis only ? ? ?
      We can Get still more Qualified Persons Collective from 2012 + 2013..
      Ithu Correcta Theriyuthu....or It may be Onsided for 2012....Let them be write a UG TRB..
      Call them Back...

      Delete
    2. Yes sir. They also should write ug trb. Call the 2012 selecters also.

      Delete
  73. Ippadi indha govt panna 2015 MLA election la neraiya vote vangi jaichiruvangaiah..... jaichiruvanga.....

    ReplyDelete
  74. Special TET revaluation should be done- high court --- raj news

    ReplyDelete
    Replies
    1. It's true!!!! Revaluation within one week!!!

      Delete
    2. apadina special tet CV wt happen anonymous....... Why the purpose of revaluation...... anything wrong from trb side........

      Delete
    3. apadina special tet CV wt happen anonymous....... Why the purpose of revaluation...... anything wrong from trb side.......

      Delete
    4. Candidate named eshwari filed petition against tamil questn number 33, so hon.judge Nagamuthu sir ordered TRB to revaluate within one week..

      Delete
  75. 500 வது நாளை நோக்கி
    ..... வெற்றி நடை போடுகிறது ... திரையிடப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து காட்சிகளிலும் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகள் ....

    கதை - தகுதித்தேர்வு

    வசனம் - தகுதி குறைந்து

    பாடல் - ஒப்பாரி

    இசை - முகாரி

    இயக்கம் - டி.ஆர்.பி

    தயாரிப்பு - தமிழக அரசு

    குடும்பத்தோடு சேர்ந்து கும்மியடித்து கொண்டாடி பார்க்க கூடிய படம்....

    (தமிழகத்தில் மட்டும்)

    ReplyDelete
  76. hari sir 100% neenga sonnamathi nadanthal romba santhosam en life la nadantha periya incident ku idaila tet result relaxable a irunthathu but ivangellam sollaratha patha romba kastama iruku

    ReplyDelete
  77. Today rank or selection list vidiranga it is confirmed news

    ReplyDelete
  78. government nadagam podukirathu. ippadiye time pass panni next election time la posting pottu vote vanga plan panni irukkanga. appuram yen ivvalavu naluku piraku ippa case potturukkanga. ithu govt solli kooda pottu irukkalam. weightage sari illanu case poduravan prospectus vitta appave case pottu irukkanum. appa enga ponanga ivarkal ellam. intha casayum court accept pandrathathu than vedikkakaiya irukku. late submit nu solli case reject panni iruntha intha problem vanthu irukkathu. exam mudinji result vanthu cv mudintha piraku weightage change panninathu than problem.prospectus follow panna ella problemum solve aki vidum. ithu govt kum theriyum. but atha ippa seiya maatanga. next election appa seivanga.

    ReplyDelete
  79. I am Sasi Krishna Moorthy , My Wife is waiting for TET Results . I Closely Watching Kalviseithi in Jaya priya .Jaya priya is creating Panic for the Teter's . Most of the Tet Candidates is from the Village side , The are Unemployment , Poverty is there ,lot of Poor's candidates are there . News Given by Jaya Priya is True or False it deost not Matter , If she continue her attitute means Many TET Candidates are going to die due to Mental Depression and Heat Attack !!!!! So , I Request Jaya priya Please Shutup Your Mouth . Selling Government Question Paper is Offence , Announcing Government Result also an Offence .All the Candidate are educated they are all know to obey the Government Rules and Regulations . If Some bad Thing Will Happen to Human Life due to your Comment (Jaya priya ) Definitely you put in the Jail .

    ReplyDelete
    Replies
    1. super punch sir neenga evalavu than sonnalum evanga thiruntha matanga sir.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. I Request Jaya priya Please Shutup Your Mouth

      Delete
    4. JAYAPRIYA அவர்களே நீ்ஙகள் யாரிடம் இருந்து தகவல் பெற்றீர்கள் ஏனெனில் பலர் உங்கள் தகவலை வித்தியாசமாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்
      நானும் தங்களின் plan 1 plan 2 என்ற தகவலால் தான் இங்கு தகவல் பரிமாற வ‌ந்துள்ளேன். தயவு செய்து உண்மை தகவலை பதிவு செய்யவும்
      என்னை போன்றவர்கள் மிகவும் trb செயல் மீது கோபத்தில் உள்ளோம்

      Delete
  80. r u jocking siva k hai friends any news pg case

    ReplyDelete
  81. நண்பர்களே , என்னதான் உண்மையோ பொய்யோ புதிய செய்தி சொல்பவர்களை தடுக்காதீர்கள் ,நாம் அனைவரும் ஆசிரியர்கள்தான் எதையும் ஏற்கும் மனம் வேண்டும் .

    ReplyDelete
  82. TRB UG TRB_ என்பது யாருடைய கூற்று

    படித்தவர்கள் எல்லாம் முட்டாள்களா TET தேர்வுக்கு காலம் போனது போதாது என்று இப்பொழுது அடுத்ததா UG TRB nu ஆரம்பிச்சது யாரு?

    ReplyDelete
  83. JAYAPRIYA அவர்களே நீ்ஙகள் யாரிடம் இருந்து தகவல் பெற்றீர்கள் ஏனெனில் பலர் உங்கள் தகவலை வித்தியாசமாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்
    நானும் தங்களின் plan 1 plan 2 என்ற தகவலால் தான் இங்கு தகவல் பரிமாற வ‌ந்துள்ளேன். தயவு செய்து உண்மை தகவலை பதிவு செய்யவும்
    என்னை போன்றவர்கள் மிகவும் trb செயல் மீது கோபத்தில் உள்ளோம்

    ReplyDelete
  84. டிஇடி posting போடும் வரை வக்கீல் களுக்கு கொள்ளை வருமானம் இந்த டிஇடி ல் பாதிக்கப்பட்ட வர்களை குறி வைத்து வக்கீல் கீழே வேலை பார்ப்பவர்கள் எளிமையாக கேஸ் பிடித்து விடுகின்றனர் .

    ReplyDelete
  85. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி