15,000 ஆசிரியர்களின் வேலை இழப்பைத் தடுத்த போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

15,000 ஆசிரியர்களின் வேலை இழப்பைத் தடுத்த போராட்டம்

்1958-ல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றிருந்த ஆசிரியர் மாணவர் விகிதத்தை, 80 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் 2-வது ஆசிரியர் என்று அரசு வெள்ளை அறிக்கைப் பிறப்பித்தது.


இது சட்டமன்றத்தில் 8.4.1958-ல் நிறைவேற்றப்படவும் இருந்தது. இதனால் 15,000 ஆசிரியர்கள் வேலை இழக்கயிருந்தனர் .இதனை எதிர்த்து நாமக்கல் இருந்து திரு.வி.இராமசாமி ரெட்டியார் தலைமையிலும், கும்பகோணத்திலிருந்து திரு.இராமையா தலைமையிலும், தென்னார்காட்டிலிருந்து திரு.சி.அப்துல் மஜித் தலைமையிலும் மாநிலம் தழுவிய சைக்கிள் அணிப் பிரச்சாரம் புறப்பட்டன..

இது இயக்க வரலாற்றில் மூன்றாவது சைக்கிள் அணியாகும்.

தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் எனப்பலரும் இணைந்த போராட்டமாக இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது..

அரசின் ஆணை திரும்பப் பெறப்பட்டது. இக்கோரிக்கையின் வெற்றியால் ஆசிரியர் இயக்கத்தின் மதிப்பும் உயர்ந்தது.

இதே ஆண்டில் இடைநிலைக் கல்வித் தகுதியுடன், இளநிலையில் பணிபுரிந்த 17,000 ஆசிரியர்களின் ஊதியப் பாதுகாப்பும் , ஆங்கில மொழி கற்பிக்க நியமனம் பெற்ற 20,000 இடைநிலை ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பும் கடுமையான போராட்டங்களுக்குப் பின் பாதுகாக்கப்பட்டது..

-வரலாறு தொடரும்..

இளம் ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர் இயக்க வரலாறினை தெரிந்துகொள்வதற்காகவும்,
போராட்ட உணர்வினை அவர்களிடம் வளர்க்கவும்
"ஆசிரியர் இயக்க வரலாறு "
என்ற பக்கத்தினை உருவாக்கி பதிவு செய்து வருகிறேன் தோழர்களே...

பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
https://m.facebook.com/profile.php?id=1475366869376303

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி