தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என அமைப்பின் பெயர் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என அமைப்பின் பெயர் மாற்றம்

1957-ல் சென்னையில் 3-வது மாநில மாநாடு நடைபெற்றது.

மொழிவழி மாநிலங்கள் உருவானதால் " சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் " என்ற அமைப்பின் பெயர் " தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி "
என மாற்றம் பெற்றது.


ஆசிரியர்களுக்குப் பென்ஷன் , கிராஜுவிடி ஆகிய கோரிக்கைகள் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.
இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு, மாவட்டக் கழகம், தனியார் பள்ளிகள் என நிர்வாக அடிப்படையில் வேறுபட்ட ஊதியங்கள் அளிக்கப்பட்டதை மாற்றி , நிர்வாக வேறுபாடின்றி ஒரே ஊதிய விகிதம் அளிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் வலியுறுத்தியது.

கோரிக்கைகளை ஏற்க வைத்து, அரசின் ஆணைகளையும் பெற்றது சாதனை எனப் பாராட்டப்பட்டன.

இயக்கத்தின் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து மாவட்டக் கழக ஆசிரியர்கள் கூட்டணியில் ஈர்க்கப்பட்டனர். சங்கப் பொறுப்புகளையும் ஏற்றனர்.

-வரலாறு தொடரும்...

இளம் ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர் இயக்க வரலாறினை தெரிந்துகொள்வதற்காகவும்,
போராட்ட உணர்வினை அவர்களிடம் வளர்க்கவும்
"ஆசிரியர் இயக்க வரலாறு "
என்ற பக்கத்தினை உருவாக்கி பதிவு செய்து வருகிறேன் தோழர்களே...

பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
https://m.facebook.com/profile.php?id=1475366869376303

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி