தமிழகம் முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: பள்ளி கல்வி துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2014

தமிழகம் முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: பள்ளி கல்வி துறை உத்தரவு.


தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 15 கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

மாவட்ட முதன்மை அலுவலர்கள் மாறுதல்:

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கஸ்தூரிபாய் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கடலூருக்கும், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி திருச்சிக்கும், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் வேலூருக்கும், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் சேலத்துக்கும், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் சென்னைக்கும் (எஸ்எஸ்ஏ), புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) சுபாஷினி திண்டுக்கல்லுக்கும், வேலூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுப்பிரமணியன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(எஸ்எஸ்ஏ) சுவாமிநாதன் விழுப்புரத்துக்கும் (எஸ்எஸ்ஏ), சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கணேசமூர்த்திநீலகிரிக்கும், நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) முருகன் திருப்பூருக்கும், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கோபிதாஸ் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) பூபதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் சீதாலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ) மாற்றப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு விவரம்:

அதேபோல், சென்னை ஐஎம்எஸ்சில் பணிபுரிந்து வந்த அனிதா, வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), தூத்துக்குடி டிஇஓ ரத்தினம், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்விஅலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), திண்டுக்கல் ஐஎம்எஸ்சில் பணிபுரிந்து வந்த பால்ராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), பட்டுகோட்டை டிஇஓ நாகேந்திரன், கரூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), கிருஷ்ணகிரி டிஇஓ துரைசாமி, திருநெல்வேலி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), திருவண்ணாமலை டிஇஓ கணேசன், பெரம்பலூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், பழனி டிஇஓ கலையரசி, திருச்சி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், அறந்தாங்கி டிஇஓ தாமரை, நாமக்கல் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், சிவகங்கை டிஇஓ ரவிக்குமார், நீலகிரி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், கடலூர் டிஇஇஓ குணசேகரன், ஈரோடு கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், கடலூர் டிஇஓ மல்லிகா, கோயம்புத்தூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், உத்தமபாளையம் டிஇஓ ஜெயலட்சுமி, தேனி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், அரியலூர் டிஇஓ கணேசன், புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், தூத்துக்குடி டிஇஓ செந்தமிழ்ச்செல்வி, நாகப்பட்டினம் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், தென்காசி டிஇஓ வசந்தி, சிவகங்கை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக பள்ளிக் கல்வி துறைநேற்று பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி