இன்ஜினியர் பணிக்கு இன்று போட்டி தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2014

இன்ஜினியர் பணிக்கு இன்று போட்டி தேர்வு.


பொதுப்பணித் துறை உள்ளிட்ட, சில துறைகளில், 98 இன்ஜினியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, இன்று நடக்கிறது. இத்தேர்வை, 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.
காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, விருப்ப பாடதேர்வும், பிற்பகல், 2:30 மணி முதல், 4:30 வரை, பொது அறிவு தேர்வும் நடக்கிறது.முதல் தேர்வு, 300 மதிப்பெண்ணுக்கும், இரண்டாவது தேர்வு, 200 மதிப்பெண்ணுக்கும் நடத்தப்படுகிறது.

எழுத்து தேர்வுக்குப் பின், 70 மதிப்பெண்ணுக்கு, நேர்முகத் தேர்வு நடக்கும்.மொத்தத்தில், 570 மதிப்பெண்ணுக்கு, தேர்வர் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., (அரசுப்பணியாளர் தேர்வாணையம்), தலைவர், பாலசுப்ரமணியன், விரிவாக செய்துள்ளார்.

5 comments:

  1. வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

    தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.
    இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.
    தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.
    இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.
    இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    ReplyDelete
  2. ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  3. நண்பர் சிவகார்த்திக் 26/7/2014 6.47 pm அவர்களுக்கு தங்களுடைய பதிவினை பார்த்தேன் சிறிது வருத்தம் பெருத்த மகிழ்ச்சி.....எங்கள் சகோதரன் ஒருவன் ஐவரையும் தூற்றிகிறானே என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி....
    தாங்கள் செய்தி பகிர்ந்து எத்தனை நாளாக இருக்கும்.....எங்கள் ஐவரின் கட்டுரையெ படித்து விட்டு சொல்லவேன்டும்.....
    இந்த TET க்காக நாங்கள் எடுத்த முயற்சிக்கு தாங்கள் அளிக்கும் பரிசு இதுதானா?????
    உன்மையெ உலகிற்கு உரக்க சொல்லுபர்கள் நாங்கள்....என் பேனாவும் எழுதும் அனைவரின் கண்ணீர் செந்நீர் துடைக்க... யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மறக்க வேண்டாம் சிவகார்த்திக் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. siva karthikJuly 26, 2014 at 10:45 PM
      கல்வி செய்தியில் ராஜலிங்கம். ஶ்ரீ.மணியரசன் . பவி. ஜெயப்பிரியா போன்றோருக்கு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து பொய்யான. தவறான தேவையற்ற செய்தி பரப்ப வேண்டாம் உண்மை தெரிந்தால் அனுப்புங்கள் இல்லை எனில் சும்மா இருங்கள் நீங்கள் உங்கள் பெயர் பிரபலமாக ஏது வேண்டும் என்றாலும் பதிய வேண்டாம். எனக்கு தெரிந்த செய்தி English க்கு BC க்கு 63 வரை வருமாம். மற்ற வகுப்புகளுக்கு தலா 1&2 மதிப்பெண் குறையும் ஆகவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எந்த செய்தியும் உண்மை அல்ல அரசு வெளியிட்டால் மட்டுமே உண்மை அதுவரையில் வரும் செய்தி பொய். இன்று பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது ஶ்ரீ என்பவரின் பொய்யான செய்தி. அவருக்கு ஒரு அன்புடன் வேண்டுகோள் உண்மை செய்தி தெரிந்தால் அனுப்புங்கள் இல்லை எனில் சும்மா இருங்கள். தமிழகத்தில் 2 ஆண்டுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் மக்கள் நல பணியாளர். பணியை அம்மா அவர்கள் பரித்தார் எனவே வேலை கிடைக்காது என்று அப்பாவி மக்கள் 150 பேர் தற்கொலை செய்த துயரம் இன்றும் மறைவதில்லை தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வர உள்ளன என இன்று கல்வி செய்தி யில் செய்தி வந்துள்ளது அப்படி நிலை உள்ள தமிழகம். ஒரு செய்தி பரப்புவது பெரிய விஷயம் இல்லை உண்மையானதை மட்டுமே கூற வேண்டும் என்ற பொறுப்பு ஒவ்வொரு நபருக்கும் வேண்டும் நாம் அனைவரும் வருங்கால மாமனிதரை உருவாக்க உள்ள பொறுப்பான ஆசிரியர். நீங்கள் கூறும் செய்த பால்வாடி பிள்ளை போல un mature ஆக செய்தி பரப்பி வருகிறீர்கள் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு நபரையும் பாதிக்கும் எனவே உங்கள் பெயர் பிரபலமாக எவ்வளவோ வழி உள்ளன தவறான செய்தி பரப்ப வேண்டாம் என் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நான் தவறாய் பேசி இருந்தால் மன்னிக்கவும்

      Sivakarthik ungaloda karuththukku nantri......
      Ungalathu karuththil entha mariyathaium theriya villaiyee......
      Ungalai mika vanmaiyaaka kandikkireen......
      Nangal peer vaanga kaddurai eluthurooma????
      Nangal yaar engalin nilai, suyaviparam therinthu pesavum....

      Delete
    2. நண்பர் ராஐலிங்கம். அவர்களே தங்களை தூற்றவேண்டும் என்பது எனது கொள்கை இல்லை உங்கள் மூலம் நிறைய செய்தி நான் அறிந்து உள்ளேன் உங்கள் 5 பேரின் சேவை கல்வி செய்திக்கு வேண்டும் உங்கள் மீது நிறைய பேர் நம்பிக்கை வைத்து உள்ளனர் நானும் தான். உங்கள் மீது எவ்வளவு மரியாதை உள்ளனவோ அதே அளவு நம்பிக்கையும் உள்ளது உங்கள் செய்தி பலரின் கண்ணீர் துடைக்க வேண்டும் ஒழிய கண்ணீர் உருவாக்க கூடாது தேவையற்ற பலரையும் கஷ்டம் உண்டாகும் செய்தி கொடுக்க வேண்டாம் உங்கள் செய்தியை நாங்கள் நம்பி கொண்டு இருக்கிறோம் சொல்ல போனால் நீங்கள் 5பேரும் எங்களுக்கு முன்னோடி. நாங்கள் அனைவரும் அரசியல் விளையாட்டால் கலக்கம் அடைந்து உள்ளோம் நீங்கள் எங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். செய்வீர்கள் என்று நம்புகிறோம். எனது பதிவு உங்களுக்கு சங்கடத்தை கொடுத்தாள் என்னை மன்னிக்கவும் நன்றி

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி