பாரதியார் பல்கலையின் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான நுழைவுத் தேர்வு, வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.
பாரதியார்பல்கலையின் கீழ் உள்ள 32 துறைகளில் உள்ள பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களுக்கு நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம்,10ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், 32 துறைகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், மேலாண்மை ஆகிய படிப்புகளுக்கு இரு நாட்கள் தேர்வு நடக்கிறது. காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடக்கும் நுழைவுத் தேர்வில், எழுத்து மற்றும் வாழ்மொழித் தேர்வு இடம்பெறுகிறது.
தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் கட்டாயம் கொண்டுவர வேண்டும். விபரங்களுக்கு,0422 2428130,2423650என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், பாரதியார் பல்கலையின்www.bu.ac.inஎன்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி