தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.


தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இந்த ஆண்டில்இதுவரை 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளரகலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில்நடைபெற்று வருகிறது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 4,520 பேர் விண்ணப்பித்திருந்தனர்.கடந்த 5 நாள்களில் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 3,500-க்கும்மேற்பட்டோருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதில் 2 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கான இடங்களைத்தேர்வு செய்துள்ளனர். கடைசி நாளான சனிக்கிழமை (ஜூலை 12) கலந்தாய்வில்பங்கேற்க 931 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவர்கள், கடைசி நாள் கலந்தாய்வில்பங்கேற்கலாம். அவர்களுக்கும் கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்என அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,000-த்துக்கும் அதிகமானஇடங்களும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. கலந்தாய்வின் மூலம் கடந்த ஆண்டு 2,400 இடங்கள் வரை நிரம்பின. நிர்வாகஒதுக்கீட்டின் கீழ் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் நிரப்பப்பட்டன. இந்தஆண்டும் ஏறத்தாழ அதே அளவிலான இடங்கள் நிரம்ப வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி