ஒருங்கிணைந்த சார்நிலைப்பணி தேர்வில் (குரூப் 2 தேர்வு) 2011-2013ல் அடங்கிய நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை 3 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.எஞ்சியுள்ள 276 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பொருட்டு 4வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு 632 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் சிறப்புப் பிரிவை சாராதவர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பும், நாளை கலந்தாய்வும் நடக்கிறது.சிறப்பு பிரிவினருக்கு (ஆதரவற்ற விதவை, மாற்றுத் திறனாளிகள்) நாளை சான்றிதழ் சரிபார்ப்பும், நாளை மறுநாள் கலந்தாய்வும் நடக்கிறது. அதே போல சிறப்பு பிரிவினர் (முன்னாள் ராணுவத்தினர்) சான்றிதழ் சரிபார்ப்பு 16ம் தேதியும், 17ம் தேதி கலந்தாய்வும் நடக்கிறது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு கலந்து கொள்ள அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண், தரவரிசை, இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது.விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி