சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை மானியக் கோரிக்கை தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2014

சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை மானியக் கோரிக்கை தாக்கல்.


தமிழக சட்டப்பேரவை 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்று மீண்டும் கூடுகிறது. இதில் தொழில்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர், மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 10ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் செய்தித்துறை மானியக்கோரிக்கையும், 11ம் தேதி குறு, சிறு, நடுத்தர தொழில் துறை, தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய முதல் நாளில் மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட7 கட்சிகள் வெளிநடப்பு செய்தன.அதன் பின்னர் 11ம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ‘ஓடுகாலிகள்’ என்ற பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் வெளியேற் றப்பட்டனர். ஓடுகாலிகள் என்ற பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி தேமுதிக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சியினரும் வெளி நடப்பு செய்தனர்.விடுமுறை நாள் என்பதால் சனி, ஞாயிறு கூட்டம்நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.

ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்து பேசுவார்.நாளை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறையும்.நாளை மறுநாள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, 17ம் தேதி உயர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை, 18ம் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறும். தொடர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி வரை கூட்டம் நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி