பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்


பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின்,இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது.
இதையடுத்து,30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும்.பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியை, டி.ஆர்.பி., மும்முரமாக செய்து வந்தது.

இணையத்தில் வெளியீடு:

இப்பணி முடிந்ததை அடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளி கூறியதாவது: பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில், பின்னடைவு பணியிடங்கள் (பேக் லாக் வேகன்சிஸ்) மற்றும் 2012 - 13க்கான காலி பணியிடங்கள் ஆகியவற்றுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர்.

5 தேர்வுகள்:

கடந்த, 2012 டி.இ.டி., தேர்வு, அதே ஆண்டின் இறுதியில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு, 2013, ஆகஸ்ட்டில் நடந்தடி.இ.டி., தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர்கள், ஊனமுற்றோர்களுக்கு, சமீபத்தில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வுஎன, ஐந்து தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின்,இறுதி மதிப்பெண், புதிய அரசாணையின் அடிப்படையில், இணைய தளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.

குறை இருந்தால்...:

தேர்வர்கள், டி.இ.டி., தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்தால், இறுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் ஏதாவது வித்தியாசம் இருந்தால், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மையங்களுக்கு சென்று, உரிய ஆதாரங்களை காட்டி, குறையை சரி செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரம் சரியாக இருந்தால், அவர்கள், எந்த காரணம் கொண்டும், சிறப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது. இந்த சரிபார்ப்புகளுக்குப் பின், வரும், 30ம் தேதி, பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 10,726 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அறிவொளி தெரிவித்தார்.

26 comments:

  1. Replies
    1. Nanri,
      Mr.Arivoli
      Nanri
      Walgavalamudan
      Therchipetra
      Asiriyaperumakal

      Delete
  2. ஒன்னுமே புரியல உலகத்தில

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Hi NEXT TET EXAM AT NOVEMBER VISIT MORE NEWS AT www.kalvikkuyil.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. s..intha news ku thaan waiting. next tet panna lakhs kanukunor wait pandrom.

      Delete
  5. Tamilaga arase zoology pass Seithavarkal405 per But vacuncy kuraithdu260 Matume Salukai mark kodudu Padithavan Vayitril adikathe

    ReplyDelete
  6. mudhal murayagha trb officer peyarudan arivippu enbadhal idhanai nambalaam. no increase of vaccency.again i am going to my house painter job

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. What about Tamil medium quata for Tamil subject. TRB not published it. Any one know plz answer

    ReplyDelete
    Replies
    1. Tamil medium quota tamil and English ku kidayathu

      Delete
    2. No I Tamil Maher I submit Tamil certificate so I have Tamil column yes

      Delete
    3. raj kumar sir what is your Roll No.?

      Even if you have yes in Tamil column, there cannot be any quota for any language major.

      Delete
    4. 20% reservation includes all communal turn..except for Tamil and. English subject..

      Delete
  10. அடுத்து என் குலதொழில் விவசாயமா? What a great government and it's rules?.

    ReplyDelete
  11. வாழ்கை கசக்குதையா:
    1. 2012 BHEL security SI Exam pass. but no join. because aim is teacher.
    2. 2012-2013 Cooperative exam pass and attend interview also attend. but exam is canceled. reason: govt.contact this exam not proper.
    3. 2013-2014 TNPSC Gp IV select first 6000candidate total list(my rank4677)
    certificate verification date: Apr 29, 2014, & Counseling date: Apr 30, 2014, but vacant filled before 27-04-2014 only BC & MBC , GT turn only.
    4.2013-2014 TNTET pass physics major . vacant only 605 what a critical stage.
    ஒன்னும் முடியல. ஒன்னுமே புரியல. இது அரசின் தவறா? அல்லது நான் இந்த மண்ணில் பிறந்தது தவறா? ஆறு ஆண்டு INDIAN ARMY service யை resign செய்து ஆசிரியராக நினைத்தது?

    ReplyDelete
    Replies
    1. My sympathies are with you.
      But it is not the fault of the Govt.
      Not taking the right decisions at the right time is entirely your mistake.

      1. Why leave the Indian Army? ... ok, you wanted to be a teacher. ... Then ...
      2. Why did you take the BHEL security SI exam? ... and also Cooperative exam?
      3. Same question - why try Group IV if your aim was to become a teacher?
      4. Vacancy in Physics is (454+133+7+11) = 605 Here your chance depends on your category and medium, so travel with hope.

      Delete
  12. Sri...sir wtg share pannomla munbu...athupol ipavum shate pannika link create pannung...ellorukum rompa use fulla irukkum

    ReplyDelete
  13. history major w/g 65.76 oc any chance to get job

    ReplyDelete
  14. காலிப்பநணிடங்களின் எண்ணிக்கை உச்தேசாமானவை மற்றும் மாறுதலுக்கு உட்பட்டவை என்று TRB Notification குறிப்பிட்டுள்ளது அப்படி என்றால் பணியிடங்கள் ஆதிகரிக்கும ? அல்லது குறையுமா ?

    ReplyDelete
  15. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நான் தாள் 1 ல் 71.77 பி.சி எனக்கும் வாய்ப்பு உள்ளதா தயவு செய்து பதில் அளிக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி