ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்குவெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு. 30-ந் தேதி பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்குவெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு. 30-ந் தேதி பட்டியல் வெளியீடு.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண்ணில்சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர் நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு 2 முறை நடத்தப்பட்டது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் தவிர மீதம் உள்ள நபர்களும் தகுதி இருந்தால் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.அதுபோல 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுமற்றும் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் பணிக்கு தகுதி இருந்தால் தேர்ச்சி பெற உள்ளனர்.அதாவது 2012 முதல் இதுவரை நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண், பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை கொண்டும் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று எடுத்த மதிப்பெண்ணை கூட்டி அதை 100-க்கு கொண்டு வரப்படுகிறது. 100-க்கு எத்தனை மதிப்பெண் என்று கணக்கிட்டு அதை வெயிட்டேஜ் மதிப்பெண் என்று அழைக்கப்படுகிறது.

வெயிட்டேஜ்மதிப்பெண் வெளியீடு

அந்த வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணைஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து பட்டதாரிகளும் பார்க்கலாம். பார்த்துவிட்டு மதிப்பெண் குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு குறிப்பிட்டுள்ள தேதிகளில் சென்று சரிபார்க்க வேண்டும். அப்போது எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், பி.எட். மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழி படித்திருந்தால் (தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் படிக்காதவர்கள்) கல்வி நிறுவன தலைவரிடம் இருந்து பட்டப்படிப்புதமிழ்வழியில் படித்ததற்கான சான்று, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான மருத்துவ குழுவினரிடம் பெற்ற சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும். அப்படி வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்கள், இரு சான்றொப்பம் இட்ட நகல்கள் கொண்டுவர வேண்டும்.

கடைசி வாய்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஏற்கனவே வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறுகிறது. அந்த தேதியும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மதிப்பெண் சரிபார்த்தல் 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 11 லட்சத்து 78 ஆயிரத்து 495 பேர் தகுதி தேர்வு எழுதினார்கள். அதில் 52 ஆயிரத்து 631 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10 ஆயிரத்து 726 பேர் நியமனம்தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 10 ஆயிரத்து 726 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் பாடவாரியாக தேர்ச்சி பெறுவோர் விவரம் வருமாறு:-

தமிழ் - 772

ஆங்கிலம் - 2,822

கணிதம் - 911

இயற்பியல் - 605

வேதியியல் - 605

தாவரவியல் - 260

விலங்கியல் - 260

வரலாறு - 3,592

புவியியல் - 899

இந்த வருடம் வரலாறு பாடம் படித்த பட்டதாரிகள் அதிகமாக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுபோல புவியியல் படித்தவர்கள் குறைவாகத்தான் எப்போதும் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 899 பேர் தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார்கள்.

30-ந் தேதி பட்டியல் வெளியீடு

இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்ட உடன் வருகிற 30-ந் தேதி பி.எட். படித்த பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முன்பாக அவர்களுக்கும் இதே வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அந்த அறிவிப்புவிரைவில் வெளியிடப்படும்.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

5 comments:

  1. Reality behind TET:

    OUT OF 43,000 PASSED TET CANDIDATES - IN PAPER 2 JUST 10726 & AROUND 3000 PAPER 1 CANDIDATES ARE GOING TO B SELECTED FOR APPOINTMENT.

    IN BOTH PAPER 1 & 2 ALL ABOVE 82 MARKS IN TET R ANNOUNCED AS ELIGIBLE ("NOT AS SELECTED").

    Out of "eligible candidates" trb wil select community wise list of candidates via higher weightage among the candidates upto the no of candidates needed community wise in every subject.

    Nobody can guess who wil get the job. Since nobody knew what is the higher weightage in their subject particularly in their community.

    All around higher weightage scorers in HSC UG B.Ed with higher tet mark alone get the job in sure.

    Lucky r English & History & Geo candidates who got more vacancies.

    Note that no of vacancy in notification is tentative. But in MBC WELFARE only little posts(totally within 200 for all subjects) r to b extended.

    Only if CM announces additional vacancy in ongoing assemby to select the passed candidate more, most of us wil get job.

    We may think in positive that - since all our fingers voted & raised the MP seats for our CM to 37/39, all our expectation
    would b somewhat satisfied by increasing the no of posts.(no of posts r tentative)

    Edn Minister calculation matches as
    10726 paper 2 + 3000 paper 1 +
    2200 PG = Around 15,000 posts.

    Spl tet 2014 results would b expected on july 16th eve of their cv before a day of kalvi manita korilkai dated july 17th. Everything ready for sel list of tet 2013. Merging spl tet 2014 & publishing along tet 2013 is very simple for trb.

    Final sel list for tet would b postponed after july 26th (july 30th) since checking the weightage mark process & cv for absentee once again to b conducted upto july 26.

    (Is there any possibility to increase spl tet candidates PH vacancies?)

    ReplyDelete
    Replies
    1. sir
      candidates who have passed in both papers will they get job preference for the selection? pls reply?

      Delete
  2. I think they will not consider both papers... Weightage mark only gng 2 write our fate...best of luck babu sir

    ReplyDelete
  3. நாங்க தான் 70000 பேர் இருக்கம்ல. அப்புறம் எதுக்கு இன்னொரு டியிடி. ஆக மொத்தம் இதுல கிடைக்கலன்னா? மறுபடி நாம தேர்வு எழுதி தான் ஆகனும். அது TRB என்ன சொல்லுதோ அதை பொறுத்தது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி