இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு.


பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய்,நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

சமூக, பொருளாதார பிரச்னையால், பள்ளி படிப்பை, மாணவர்கள் பாதியில் கைவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, 2011 - 12ல் இருந்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 10 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 1,500 ரூபாயும், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாயும், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்தத் தொகை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம்) முதலீடு செய்யப்பட்டு, மாணவர்கள், மேல்நிலைக்கல்வி முடித்ததும், வழங்கப்படுகிறது.2011 - 12ல், 313 கோடி; 2012 - 13ல், 353 கோடி; 2013 -14ல், 381 கோடி ரூபாய், ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இதில், முறையே, 19 லட்சம், 21 லட்சம் மற்றும், 23 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.l நடப்பு, 2014 - 15ம் கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் இறுதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அடுத்த மாதம் இறுதியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி