ஆசிரியர்கள் நியமனம்: எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர் - நக்கீரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2014

ஆசிரியர்கள் நியமனம்: எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர் - நக்கீரன்

திமுக தலைவர் கலைஞர் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேள்வி :- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை தமிழக அரசே எடுத்துக் கொண்ட போதிலும், அங்கே மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதாகவும், கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்களே?


கலைஞர் :- இதுபற்றி பலமுறை பல தரப்பினராலும் சொல்லப்பட்ட போதிலும் இந்த அரசு அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் சார்பில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்காக தனியே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள அனுமதிக்குமாறு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், ``தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனங் கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு என்று தனியே நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது’’ என்று தெரிவித்திருக்கிறது.


கேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப்
படுகிறதே?


கலைஞர் :- கடந்த 17-7-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகிய மூன்று முக்கிய மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மூன்று முக்கியத் துறைகளும் பேரவையிலே ஒரே நாளில் அவசர அவசரமாக விவாதிக்கப் பட்டுள் ளது என்பதில் இருந்தே, இந்தத் துறைகளின்பால் இந்த ஆட்சியினருக்கு உள்ள ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


கழக ஆட்சியில் மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டு, இந்த மூன்று துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டதற்கு மாறாக தற்போது ஒரே நாளில் மூன்று துறைகளுக்கான மானியங்கள் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானிய விவாதத்தின் போது பல முக்கிய அறிவிப்புகளை ஆசிரியர் சமுதாயம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. குறிப்பாகப் பள்ளிகளில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத் தும் மாணவர் நலன் - முன்னேற்றம் கருதி நிறைவு செய்யப்படும் என்றும்; முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத் திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறி விப்பார்கள் என்றும் ; அ.தி.மு.க. அரசு ஏற்கனவே அறிவித்தவாறு 61 மாணவர்களுக்கே 3 ஆசிரியர் கள் நியமிக்கப்படுவர் என்றும் ; மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டு 1,268 பள்ளிகளை மூடும் திட்டம் கைவிடப்படும் என்றும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தப்படும் என்றும்; இவை அனைத்தையும் நிறைவு செய்திடும் வண்ணம் தேவையான அறிவிப்புகள் எல்லாம் அணி அணியாக வரப் போகிறதென்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எந்த அறிவிப்பும் வரவில்லை.


பள்ளிக் கல்வி அமைச்சர், இடை நிலை ஆசிரியர்கள் அல்லாத 3,459 புது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. அ.தி.மு.க. அரசு அமைந்து மூன்றாண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் இந்தப் பள்ளிக் கல்வித்துறை ஆறு அமைச்சர்களைக் கண்டிருக்கிறது என்ற ஒன்றே இந்தத் துறையின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டும்.


பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக முதலில் பொறுப்பேற்ற சி.வி. சண்முகம், அவர் அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார். சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து இந்தத் துறையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு வார காலமே அந்தத் துறையின் அமைச்சராக இருந்தார். அவர் 55 ஆயிரம் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுவிட்டார்கள் என்று, திடீரென்று ஒரு போடு போட்டார்; அ.தி.மு.க. ஆட்சியில் புதிய தாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை பற்றி, அவரிடம் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே, அவரிடமிருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டு, அமைச்சரவையிலிருந்து கழற்றி விடப்பட்டார். அவரைத் தொடர்ந்து என்.ஆர். சிவபதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரானார். அவரோ முன்னர் செய்யப்பட்ட அறிவிப்புகளை ஆராய்ந்து பார்க்காமல், 26 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப் போகிறோம் என்றார். சில நாட்களுக்குப் பிறகு விழிப்புணர்வு பெற்றவரைப் போல, அவரே 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.


சிவபதியைத் தொடர்ந்து நான்காவது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக வைகைச் செல்வனும், ஐந்தாவது அமைச்சராக என்.எஸ். பழனியப்பனும் பொறுப்பிலே இருந்த போது “நமக்கேன் வம்பு” என்று ஆசிரியர் நியமனம் பற்றியே எதுவும் கூற வில்லை. ஆனால் அப்போது ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. அரசு 64 ஆயிரம் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நியமித்துள்ளது என்றார். இன்று அவர் இருக்குமிடம் தெரியவில்லை.


இன்றைய பள்ளிக் கல்வி அமைச்சர் 12-7-2014 அன்று ஒரு விழாவில் பேசும் போது, கடந்த மூன்றாண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார். ஆம் ;10ஆம் தேதி பேரவை தொடங்கிய பிறகு அமைச்சர் செய்த அறிவிப்பு இது!


ஆனால் இதே அமைச்சர் கல்வி மானியக் கோரிக்கையின் விவாதத்தின் போது 3,459 ஆசிரியர்கள் மற்றும் 415 ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்திருக்கிறார். எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ அ.தி.மு.க. அமைச்சர்களால்!


உண்மையில் எத்தனை ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் சங்கத்தாரைக் கேட்டால் மிகக் குறைவாகக் கூறுகிறார்கள். கல்வி மானியத்திற்குப் பதிலளித்த அமைச்சர், இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக எதுவும் கூறாததால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.


கேள்வி :- 2,325 கோடி ரூபாய் செலவில் சாலைகள் - பாலங்கள் - சுரங்கப் பாதைகள் அமைக்கும் திட்டங்களை 110வது விதியின்கீழ் முதல் அமைச்சர் ஜெயலலிதா 25-7-2014 அன்று அறிவித்து அனைத்து நாளேடுகளிலும் பெரிதாகச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதே?


கலைஞர் :- நெடுஞ்சாலைத் துறைக்கென்று தமிழக அரசில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அந்தத் துறைகள் பற்றிய மானியத்தின் மீதான விவாதம் 16-7-2014 அன்று பேரவையில் விவாதிக்கப்பட்டு, அந்தத் துறையின் அமைச்சர் பேரவையில் பதில் அளித்திருக்கிறார். அப்போது அவர் 7 அறிவிப்புகளை மட்டுமே பேரவையில் செய்தார். அவர் அந்த அறிவிப்புகளை பேரவையிலே படித்த போது, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி” என்றுதான் ஒவ்வொரு அறிவிப்பின் தொடர்ச்சியிலும் குறிப்பிட்டு அந்த அறிவிப்புகளைப் படித்தார். (ஒவ்வொரு துறை சார்பில் அமைச்சர்களின் அறிவிப்புகள் புத்தகமாகத் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதில், ஒவ்வொரு அறிவிப்பிலும் இவ்வாறு முதலமைச்சரைப் பற்றிக் குறிப்பிட்டுத்தான் அச்சடித்திருக்கிறார்கள்) அந்த ஏழு அறிவிப்புகளுக்கான மொத்தச் செலவு 150 கோடியே 95 இலட்ச ரூபாய். அந்த ஏழு அறிவிப்புகளில் ஒன்று திருவரங்கம் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளுக்காக 81 கோடி ரூபாயாம். மற்ற ஆறு பணிகளின் செலவு 69.55 கோடி ரூபாய். இந்த ஏழு அறிவிப்புகளைத்தான் மிக அழகாகப் புத்தக மாகத் தயாரித்து உறுப்பினர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.


நெடுஞ்சாலைத் துறை மானியம் பற்றி இவ்வாறு 16ஆம் தேதி பேரவையில் விவாதம் முடிவுற்ற பிறகு, அதே துறை சம்பந்தப்பட்ட 2,325 கோடியில் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கப் போவதாக முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அறிவிக்கிறார் என்றால், பிறகு எதற்காக தனியாக ஒரு மானியம், அதன் மீது விவாதம், அதற்கு அமைச்சர் பதில் உரை, அறிவிப்புகள், அதுபற்றிய புத்தகங்கள்? அன்றாடம் முதலமைச்சரே ஒவ்வொரு துறை சார்பிலும் 110வது விதியின் கீழ் அந்த ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகளை யெல்லாம் செய்து விட்டுப்போக வேண்டியது தானே? 110வது விதியின் கீழ் அறிக்கை என்றால், ஏதோ ஒரு நாள் அவசர அவசியத்திற்காகத் தரப்படுவதாகும். அதுதான் மரபும் கூட. ஆனால் எந்த அமைச்சர்களும் பெரிய அறிவிப்புகளைச் செய்ய முடியாமல், ஒவ்வொரு நாளும் முதல் அமைச்சரே அவையில் மணிக் கணக்கில் 110வது அறிக்கைகளைப் படிப்பதும், அதற்கு ஒரு சிலர் பாராட்டுத் தெரிவிப்பதும், அந்த அறிக்கைகளை ஒட்டியே முதலமைச்சர் எதிர்க் கட்சிகளைக் குற்றஞ் சாட்டிப் பேசுவதும், அதற்குப் பதிலளிக்க அவர்களுக்குரிய உரிமைகளை மறுப்பதும் என்ற போக்கில் அன்றாடம் பேரவை நடந்து வருகிறது. அதிலே ஒன்றாகத்தான் நெடுஞ்சாலைத் துறை பற்றிய மானியம் விவாதம் முடிந்த ஒரு வாரத்தில் அந்தத் துறை பற்றிய அறிவிப்புகளை 2, 325 கோடி ரூபாய்க்கு 110வது விதியின் கீழ் முதலமைச்சர் பேரவையில் செய்திருக்கிறார்.


நெடுஞ்சாலைத் துறை மானிய விவாதத்தின் போது, செய்த அறிவிப்புகள் பற்றி, 26-7-2014 `டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு, “Tamil Nadu has plans but little cash in highways kitty - Funding of Projects worth over Rs. 2000 crores Not Clear” என்ற தலைப்பில் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், ``மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த வாரம் வைக்கப்பட்ட கொள்கைக் குறிப்பில் 2000 கோடி ருபாய் செலவில் சென்னையில் 17 சாலைத் திட்டங்கள் அமைக்க, ஜப்பான் நிறுவனம் ஒன்று முதலீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஜப்பான் நிறுவனம், இந்தத் திட்டம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்று கூறியிருக்கிறது. ஜப்பான் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சஞ்சீவ் மகோல்கர் என்பவர் ``தமிழக அரசிடமிருந்து இதுபற்றி எந்தக் கருத்துரு வும் எங்களுக்கு வரவில்லை.நாங்கள் தொழில் தாழ்வாரம் (Industrial Corridor) அமைப்பது பற்றித் தான், குறிப்பாக பெங்களூரில் தொடங்குவது பற்றித் தான் ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த நிலையில் தமிழக அரசின் கொள்கைக்குறிப்பில் இவ்வாறு கூறியிருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.


மேலும் அந்தப் பத்திரிகைச் செய்தியில், ``இந்த அரசு மிகப் பெரிய திட்டங்களையெல்லாம் அறிவிப் பதில் அவசரமும் ஆர்வமும் காட்டுகிறது என்பதற்கு அடையாளமாக, கடந்த வெள்ளிக்கிழமை 2000 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பெரிய திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வரப் போகிறது? தனியாரிடமிருந்து நிதி பெற்று இந்தத் திட்டங்களைத் தொடங்கினால், தனியார் விரைவில் லாபம் பெறுவதற்காக மக்களிட மிருந்து அதிகத் தொகையை கட்டணமாக வசூலிக்க நேரிடும்’’ என்றும் எழுதியிருக்கின்றது. “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையிடம் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜி.எஸ்.டி. ரோடு இந்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்த மானது. எங்கள் துறை அந்தச் சாலையில் எதுவும் கட்ட முடியாது. ஆனால் இந்தத் திட்டத்தை அரசு எவ்வாறு அறிவித்திருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்ததாகவும் அந்த ஆங்கில நாளேட்டில் செய்தி வந்துள்ளது. “டைம்ஸ் ஆப் இந்தியா” எழுப்பியுள்ள இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முதல் அமைச்சர் மற்றொரு அறிக்கையை 110வது விதியின் கீழ் படிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


கேள்வி :- தமிழகத்தில் 10ஆயிரம் வீடுகளில் தலா ஒரு கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனம் நிறுவினால், 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற இந்த அரசின் திட்டத்தின் படி இதுவரை எத்தனை வீடுகளில் இந்தச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது?


கலைஞர் :- அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. பத்திரிகையில் வந்த செய்திப்படி, இதுவரை 35 வீடுகளில் மட்டுமே சூரிய சக்தி மின் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சூரிய சக்தி மின் உற்பத்தியில், தமிழகம் பின்தங்கியே உள்ளது. இந்தத் திட்டம் பற்றி `தினமலர்’ பத்திரிகையில் வந்த செய்தியில், “தடுமாறும் தமிழக அரசின் சூரிய சக்தி மின் திட்டம் - அதிகாரிகள் அலட்சியத்தால் எல்லாமே பாழ்” என்றே தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.


கேள்வி :- நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் ஊக்கத் தொகை வழங்கக் கூடாதென்று மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு பற்றி?

கலைஞர் :- இதுபற்றி நான் விவரமாக அறிக்கை கொடுத்திருக்கிறேன். இந்த ஊக்கத் தொகை கொடுக்கின்ற வரலாறே எப்படி ஆரம்பமானது என்பதை நான் கூற விரும்புகிறேன். மத்திய வேளாண்மைத் துறை அமைச்சராக பாபு ஜெகஜீவன்ராம் இருந்த போதுதான், நெல் கொள் முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை விவசாயிகள் என்னிடம் தெரிவித்த நேரத்தில், அவர்களின் சார்பாக டெல்லி சென்ற நான் மத்திய அமைச்சரிடம் அதுபற்றிப் பேசினேன். ஜெகஜீ வன்ராம் அவர்களும் என்னென்ன வழியையோ சிந்தித்துப் பார்த்து விட்டு, கொள்முதல் விலையை அதிகப்படுத்தித் தர இயலாது என்பதற்கான காரணங்களைச் சொல்லி விட்டு, இறுதியாக அவர்தான் எனக்கு, ``ஊக்கத் தொகை என்கிற பெயரால், போக்குவரத்துச் செலவுகள் என்கிற பெயரால் மாநில அரசாக ஒரு தொகையைக் கொடுக்கலாம்’’ என்று தெரிவித்தார். அதன் பிறகு தான் தமிழக அரசு முதன் முதலாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு 15 ரூபாய் ஊக்கத் தொகை என்ற பெயரில் அளித்தது. அதற்குத்தான் தற்போது மத்திய அரசினால் ஆபத்து வரும் போல் இருக்கிறது.


இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

53 comments:

  1. எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர்

    ReplyDelete
    Replies
    1. க‌லைஞர் அவர்களே நீங்கள் இவ்வளவு நாளாக தமிழ் நாட்டில் தான் இருந்தீர்களா இல்லை வெளி நாடு சென்று வந்தீர்களா? எப்படி இப்போது திடீரென்று உங்களுக்கு இந்த ஐடியா தோன்றியது ஓஓஓ அடுத்த சட்டமன்ற தேர்தலுக்காகவா அதெல்லாம் ஒன்னும் பருப்பு வேகாது எங்கள் ஓட்டை யாருக்கு போடுவதுஎன்று எங்களுக்கு தெரியும் போய் வேற வேலை எதுவும் இருந்தா பாருங்க?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. sun news
      live news eve 4something
      teachers sanga thalaivar pesinar
      "15000 teachers nirappuvathaga arivippu seiyyapattullathu but kaalipani idam enpathu illai. pani niraval mudinthathil 2000 teachers ubariyaga ullanar . ini than kaalipani idam uruvakka vendum . tharam uyarthapadum pallikalai kondu kaalipani idam uruvagum" sonnanga na ethaium sekkala .

      Delete
    4. ithu patriya ungal karuthu i waiting for ur cmt . avaru pesumpothu govt and govt aided school rendulaum kaalipani idam illanu sonnaru

      Delete
    5. 100% correct sir.....
      SGT teacher posting ippa thaan create pantranga athan late.

      Delete
    6. Mr. P. Rajalingam sir, Sgt posting How many vacany????? If the govt.create the vacancy How much it comes????? Pls sir if you know about the details inform me????? Please ...... because i have less beliveness about my posting????????

      Delete
  2. unmaiyilae kalaigar avargal TET-KKU MUKKIYATHUVAM KODUTHU KOORIYIRUPPATHU

    NICHAYAM POSTING VACANT INCREASE AAGUM., KANDIPPAKA POSTING INCREASE

    AAGUM., ETHANAL AMAICHARAL ORAE NILAIYIL THELIVANA PATHIL-I SOLLO MUDIYA

    VILLAI., RESPTECTED TRB OFFICIALS ARE TO BE FRANK TO POSTING VACANT LIST

    AND MINIMUM TIME OR MAXIMUM TIME LIMIT FOR POSTING ASSURANCE .,

    PLS. WHAT HAPPENED IN UR DEPARTMENT ? NEENGAL AMAICHARUKKAE THELIVANA LIST KODUKKATHATHAL THAN PAVAM KALVI AMACHARALUM KOORA MUDIYAVILLAI.,

    AMMA CM AVARGALUKKUM UNGALAL THAN NALLA AATCHIKKU KETTA PEYAR KIDAIKIRATHU ENPATHU KANKOODAGA THERIGIRATHU.,

    DEAR RESPECTED TRB OFFICIALS, 5% RELAXATION KODUTHATHU KOODA PARAVAYILLAI AANAL POSTING INCREASE AAGA VAITHU AMMA CM AVARGALUKKU

    AMMA CM AVARGALING AATCHIKKU NALLA PAYAR NILAI NATTA POSTING VACANCY

    MARAIKKAMAL CM AVARGALAIN PARVAIKKU EDUTHU SENDRU TAMIL VACANCY-I INCREASE SEYYUNGAL., MELUM PAPER 1 TET CANDIDATES-KKU INDHA MURAI

    EVVALOVUTHAN POSTING PODUVEERGAL ENDRU ATLEAST ORU PRESS RELEASE

    KODUTHAL THAN ENND., 40000 PER PASS SEIYTHU VITTU EVVOLOVU ETHIRPARPUDAN

    ULLARGAL., PAPER 2 TAMIL, MATHS VACANCY INCREASE PANNUNGAL., THIS IS OUR

    REQUEST ONLY., AMMA CM AVARGALUKIN PONNANA AATCHIKKU NALLA PEYAR-I NEENGAL THAN KAPPADRA VENDRUM., IDHU 73000 TET PASS CANDIDATES -IN KORIKKAI ENDRU VAITHU KOLLUNGAL.,

    ReplyDelete
  3. thanks admini sir neenga romba nallavaru

    ReplyDelete
  4. தாள் 1 பாஸ் ஆனவங்க நிலமை?????

    ReplyDelete
    Replies
    1. PAPER1.!
      Kavalai pada vendam nanbargale. Govt puthithaga tuvangum 'Aangila vazhi kalvikum' saerthu kandipaga 5000 posting ethir parkalam.!!" Vidaa muyatchi vishvaruuba vetri....!!!!!!

      Delete
    2. Paper1 govt arivithulla 900+ backlog vacancy aagave irukum yenru thonrugirathu.
      Puthithaga kurainthathu 3000 idangaluku mael irukum yenru thonrugirathu..!!!!Athigapatcham 5000 idangal irukalam

      Delete
  5. Muthalil Kalayar Aiyya avargal mulumayaga therinthukonu pesavendum. 3459 enpathu 2014-15 vagancy. Ean theriyamal pesukirar. Evar atchiel evvalavu teachers posting pottar. Yaro thavaraga eluthi koduthathai theriyamal sollukirar.

    ReplyDelete
  6. TRB says 10726 postings only filled. TRB is confident to fill the postings at the time of closure of all the cases. This is the fact. But all the TET passed persons says increase postings up to 30000. This is imposible. All are well prepare the next TET/TRB. All the Best.

    ReplyDelete
    Replies
    1. Wait pane paarpam sir...

      Group 4 ku prepare panrathu best

      Delete
    2. sir Sorry to ask this . what is position of PHYSICS MAJOR weightage 68.57 BC COMMUNITY .

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. sri சார் அவர்களே இது போன்ற கட்டுரை வெளியிடுவதை பணி நியமனம் வரை நிறுத்துங்கள் please

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம் .. ஆனால் இது கட்டுரையல்ல நக்கீரன் செய்தி...

      Delete
    2. நன்றி sri சார் அவர்களே

      Delete
    3. Hello madam ஒருவர் நல்லது செய்தால் உங்களுக்கு பிடிக்காதா?
      ஸ்ரீ சார் ஒருசிலர் சொல்வதால் நீங்கள் உங்கள் கருத்துகளை நிறுத்திவிடாதீர்கள்
      பலருக்கு உங்கள் கருத்து பயனுள்ளதாக உள்ளது

      Delete
    4. Sri sir ungal pani thodaravendum

      Delete
    5. Very good sir, Pls continue

      Delete
  9. Sri arumaiyana katturai .
    தலைவர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தயவு செய்து மீண்டும் ஒருமுறை தலைப்பை சரியாக படியுங்கள்.. இது கட்டுரையல்ல தலைப்பிலே குறிப்பிட்டுள்ளேன் இது நக்கீரன் செய்தி...

      Delete
    2. நண்பர்களே இந்த செய்தியை நன்றாக படியுங்கள். இதை வெளியிட உதவிய sri சார் அவர்களுக்கும் கல்விச்செய்தி நிர்வாகத்திற்கும் உங்களது நன்றியை சொல்லுங்கள் ஆனால் கலைஞர்அவர்களுக்கு மட்டும் உங்களது நன்றியை சொல்லி நீங்களே அசிங்கப்படுத்தி கொள்ளாதீர்கள் .உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை இது முழுக்க முழுக்க அரசியல்.

      Delete
    3. exactly you are correct . they are creating sympathy for the next election

      Delete
    4. exactly you are correct . they are creating sympathy for the next election

      Delete
    5. susmi latha vanga latea vanthalum latesta vanthu erukkinga do u remember me ??

      Delete
    6. Sushmi latha...............
      Ithu arasiyalo veru yaetho,..? Athu namaku tevai illai... paper 1 patri yarumey kural yelupatha poathu ivaravathu kelvigalai ketu irukirare.....! Atharkagavathu avaruku nanri kooriye aaga vendum. Ithargu amma avargal pathil kooruvargal. Apoluthu unmai nilai purium allava..!!!!!!

      Delete
    7. Vettai manna ...
      Sgt ku posting poduvangala!!!
      Thanks
      Thanks
      Thanks

      Delete
  10. 2013-14 posting evalavu govt sollavillai athai yarai vaithu nirapuvargal

    ReplyDelete
  11. மிக அருமையான செய்தி.
    அனேகமாக பத்தாவதாக வரப்போகிற அமைச்சர் தான் பணி நியமனம் செய்வார் போல் தெரிகிறது, ,,,

    ReplyDelete
    Replies
    1. 68.89/sc/male/DOB-27.09.1986/என் கணவருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

      Delete
    2. சகோதரி தாள் 1 அ தாள் 2 ?

      Delete
    3. தாள் 1 சார்

      Delete
    4. வாய்ப்பு அதிகம்

      Delete
  12. ஒருவருக்கு நன்றி கூறுவது தவறா ?
    தவறு எனில் எந்த வெங்காயத்தின் அனுமதியும் தேவையில்லை.
    நன்றி
    நன்றி
    நன்றி

    ReplyDelete
  13. Kalaigar avargal yen evvalu natkalaka ketkavillai. Avargal MLA kkalavathu kettarkala.

    ReplyDelete
  14. Kalaiselvan sir
    30th final list or selection list varuma varadha.
    Please nalai engalukaga trb il visarithu thagaval sollungal sir
    Innium drama todarndhal,,,..............
    Please sir

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. கலைஞர் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது கலைஞர் எப்பவுமே ஆசிரியர்களுக்கு சாதகமாகத்தான் இருப்பார்

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தற்கொலை மனநிலையில் ஆசிரியர்கள்
      அருமையான ஆட்சி
      தொடரட்டும்
      (((காமராஜர் ஐயா இன்னும் ஒரு பிறவி எடுப்பீர்களா ????????)))

      Delete
  20. soon
    just 2 days
    9952182832

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. ஆசிரியர்களை நியமிக்க துளி கூட விரும்பாத அரசு எதுக்கு Tet எதுக்கு 5% ஒதுக்கீடு எல்லாம் அரசியல் விளையாட்டு

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. hai friends any pg news pls update....

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி