வேலைக்காக காத்திருப்போர் தமிழகத்தில் 84.78 லட்சம் பேர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2014

வேலைக்காக காத்திருப்போர் தமிழகத்தில் 84.78 லட்சம் பேர்.


தமிழகத்தில், அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவேடுகளின்படி, 84.78 லட்சம் பேர், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
இது குறித்து, அமைச்சர் மோகன், சட்டசபையில் கூறியதாவது:தமிழகத்தில், 37 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. அனைத்து அலுவலகங்களும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.கடந்த 2013 - 14ல் மட்டும், 15.23 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச்,31ம் தேதி வரை, பதிவு செய்து, வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை, 84.78 லட்சம்.கிராமப்புற இளைஞர்களுக்காக, 32 மாவட்ட தலைநகரங்களில், 385 ஊராட்சி ஒன்றியங்களில், தன்னார்வ பயிலும் வட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயார் செய்யப்படுகின்றனர்.இவ்வாறு, மோகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி