டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2014

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.


கடந்த, 2005ல், தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் -1 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த ஐகோர்ட், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற, 83 பேரின் தேர்வை ரத்து செய்ததுடன், முறைகேடு நடந்ததையும் உறுதி செய்தது. இதையடுத்து, தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்வை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்து, நேற்று தீர்ப்பளித்தது. இதன்படி, தமிழகத்தில் 83 டி.ஆர்.ஓ.,க்கள் பதவி இழக்கின்றனர்.

'டிஸ்மிஸ்' எளிதல்ல:

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரம் கூறியதாவது: எழுத்து தேர்வில், குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு, மதிப்பெண் அளிப்பதில் தாராளம் காட்டப்பட்டது என்பது தான் குற்றச்சாட்டு. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படலாம். அதன் மீது விசாரணை நடந்து தீர்ப்பு வர வேண்டும். அப்படி, மறு ஆய்வு மனு மீதும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்படும். அப்போது, 83 பேரையும், 'டிஸ்மிஸ்' செய்வது குறித்த அரசாணையை, தமிழக அரசு வெளியிட வேண்டும். அப்போது தான், 83 பேரையும், பணி நீக்கம் செய்ய முடியும். 83 பேரும், தற்போது, ஒன்று, இரண்டு பதவி உயர்வு பெற்று, உயர் அதிகாரிகளாக உள்ளனர். எனவே, 83 பேரையும், 'டிஸ்மிஸ்' செய்வது என்பது எளிதான காரியம் கிடையாது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரம் தெரிவித்தது.

3 comments:

  1. money vangittu posting podurathu easy but supreme courte sonnalum dismis panrathu kastam . thiruttu pasangala .epoda nermaiya iruppinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி