அனுமதி பெறாமல் படிப்பு:முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2014

அனுமதி பெறாமல் படிப்பு:முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல் - தினமலர்

கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும், முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், எம்.பில்., படித்து வருகின்றனர். இதை, இவர்களது பணி பதிவேட்டில் சேர்ப்பதிலும், அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதம் உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது.புகாரை அடுத்து, இவர்களது பெயர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படி, தொழிற்கல்வி இயக்குனர் தர்ம ராஜேந்திரன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரவில், 'முதுகலை ஆசிரியராக பணிபுரிபவர் எம்.பில்., படிக்க வேண்டுமானால், அவர் பணிபுரியும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். முறையான அனுமதி பெறாமல், எம்.பில்., படிப்பவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி