'அட்டஸ்டேஷன்' தேவையில்லை: மத்திய அரசு அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

'அட்டஸ்டேஷன்' தேவையில்லை: மத்திய அரசு அதிரடி


அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை; சுய ஒப்புகை மட்டுமே போதுமானது' என,மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த பணிகள், வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளிட்ட முக்கிய விண்ணப்பங்களுடன், நகல் சான்றிதழ்களை அனுப்பும் போது, அதில், 'நோட்டரி பப்ளிக்' அல்லது பச்சை மை உபயோகப்படுத்தும், தகுதியுள்ள அதிகாரிகளிடம், 'அட்டஸ்டேஷன்' கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, பண விரயம் மட்டுமின்றி, நேர விரயமும் ஆவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 'விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அனுப்பும் நகல்களில், தாங்களே கையொப்பம் இட்டு அனுப்பினால் போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அசல் சான்றிதழ் காண்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 comment:

  1. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். தாமதிக்காதீர் நண்பர்களே.


    9003540800
    9442799974
    rlakthika@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி