தாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

தாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு.


தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு மற்றும் பள்ளிகள் பெயர் விவரப் பட்டியல், நாளை (ஜூலை 17) நடக்கும் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் வெளியாகுமா' என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகள் விவரம் அறிவிக்கப்படும். ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் அறிவிப்பு மற்றும் பெயர் பட்டியல் விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு உட்பட்ட நடுநிலை பள்ளிகள் கடந்தாண்டு நிதித் தட்டுப்பாடு காரணமாக 50 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டன. 2ம் கட்டமாக தரம் உயர்த்தப்படவில்லை.

'கல்வி கட்டமைப்பு' (எஜூகேஷனல் பிரமிடு) விதிப்படி, ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலை பள்ளிகளை விட, உயர்நிலை பள்ளிகள் தான் அதிக எண்ணிக்கையில் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், கடந்தாண்டின்நிலை கல்வி கட்டமைப்பை கேள்விக் குறியாக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்தாண்டில் பள்ளிகள் தரம் உயர்த்துதல் விஷயத்தில் அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் குறுக்கீடு:

போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாத பள்ளிகளும் அரசியல் குறுக்கீடு காரணமாககடந்தாண்டில் தரம் உயர்த்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. எனவே, இந்தாண்டு தரம் உயர்த்தும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதா என முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட பின், அதற்கான ஆசிரியர் பணியிடங்களையும் தாமதிக்காமல் நிரப்பினால் தான் எதிர்பார்த்த கல்வி வளர்ச்சி ஏற்படும் என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

'காலி'களால் கவலை:

அதேபோல் இத்துறையை எதிர்நோக்கியுள்ள மற்றொரு பிரச்னை, காலியாக உள்ள கல்வி அதிகாரிகள் பணியிடங்கள். மொத்தமுள்ள 120 டி.இ.ஓ.,க்களில், 40 பணியிடங்கள் வரை காலியாக உள்ளன. 64 முதன்மை கல்வி அலுவலர்களில், 13 இடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர, ஒரு இயக்குனர், 3 இணை இயக்குனர்கள் என முக்கிய கல்விஅதிகாரிகள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.

பெரும்பாலாலும் 'பொறுப்பு' அதிகாரிகளால் அந்த இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால், இரண்டு பொறுப்புக்களையும் சரியாக கண்காணிக்க முடியாமல், கல்வி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, கல்வித் துறையில் குவிந்து கிடக்கும் ஐகோர்ட் வழக்குகளை தீர்க்கும் வகையிலும் நாளை நடக்கும் மானியக் கோரிக்கையில் தனிகவனம் செலுத்தி அறிவிப்புகள் வெளியாக வேண்டும்,என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

12 comments:

  1. Mani sir if any chance to u sir.i will pray for any time to u sir.

    ReplyDelete
  2. History majormbcwt60.86 any chance get to job please sollunga friends please

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். தாமதிக்காதீர் நண்பர்களே.


    9003540800
    9442799974
    rlakthika@gmail.com

    ReplyDelete
  4. JAYAPRIYA MAM PLS HISTORY BC CUT OFF SOLLUNGA. PLS,PLS,PLS OR YOUR MAIL ID PLS.

    ReplyDelete
  5. டுபாக்கூர் ஜெயப்பிரியா.டுபாக்கூர் ராஜலிங்கம் Many டுபாக்கூர் Are washed away by tsunami waves

    ReplyDelete
    Replies
    1. சகோதரி pavi ஜெயபிரயா கூறியது 100% உண்மை உண்டு அவர் கூறிய அதே செய்தி எனக்கும் வந்தது பொருத்து இருந்து பாருங்கள் BC க்கு அதிக போட்டி வரும் 68 க்கு ஆண்கள். 66 க்கு. பெண்கள் cutoff. வரும் இதுவே இறுதி உண்மை

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அரசுகளின் மெத்தனால் போக்கு காரணமாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை பள்ளி குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல். படிப்பில் பின் தங்கும் நிலை ஏற்ப்பட்டு உள்ளன. இதன் காரணமாக குழந்தைகளை தனியார் பள்ளிகளில பெற்றோர் . சேர்க்கின்றனர

    ReplyDelete
  8. அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள். சேரவில்லை. என்றால் ஆசிரியர் மட்டுமே காரணம் அல்ல அரசும்தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி