அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயபால், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் அசோக்குமார் சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கிப் பேசினார்.உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லாப் பொருள்கள்வழங்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து, விலையில்லாப் பொருள்கள் விநியோகத்துக்குத் தனி அலுவலர் நியமிக்கக் கோருவது. பட்டதாரி ஆசிரியர் நியமன எண்ணிக்கைக்கு ஏற்ப பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட 50% பதவி உயர்வு மறுக்கப்படுவதைபலமுறை சுட்டிக்காட்டியும் கல்வித் துறை கவனத்தில் ஏற்கவில்லை. எனவே, கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அளிக்கப்பட்ட பதவி உயர்வு குறித்து கல்வித் துறைவெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவது.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஒளிவுமறைவற்ற முறையில் நடத்தவும், இரவு நேர கலந்தாய்வுகளைத் தவிர்த்து அனைத்து கலந்தாய்வுகளையும் பகல் நேரத்தில் நடத்தவும் வலியுறுத்துவது. அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோருவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின்தலைமையிடச் செயலாளர் சங்கர், வட்டப் பொறுப்பாளர்கள் லூயிஸ், ஆரோக்கியசாமி, ஜரோன், யாசின் மற்றும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அனைத்து SC CANDIDATE களும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் கடந்த 2012 நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமனத்தில் இட ஒதிக்கீடு மற்றும் இன வாரியான பணி நியமனம் பின்பற்றபடவில்லை மற்றும் அந்த தேர்வில் SC CANDIDATES அதிகமாக தேர்ச்சிபெறவில்லை எனவே அப்போதைய SC காலிப்பணியிடத்தை தற்போது நடைபெற்ற 2013 TET தேர்வின் மூலம் பின்னடைவு SC காலி பணியிடமாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை TRB யும் பள்ளிகல்வி துறையும் இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை இதனால் SC இட ஒதிக்கீடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. ஆகவே SC CANDIDATES அனைவரும் அனைத்து பாட வாரியான SC பின்னடைவு காலி பணியிடத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டி தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 ன், படி TRB-க்கும் பள்ளி கல்வி துறைக்கும் விண்ணப்பம் அனுப்பவும். வசதி உள்ளவர்கள் நீதி மன்றம் மூலம் அணுகவும் .
ReplyDeleteஅதன்படி SC பின்னடைவு காலி பணியிடம் வெளியிடப்பட்டால், தற்போது TET 2013 (paper 2) ல் தேர்ச்சிபெற்ற அனைத்து SC CANDIDATES க்கும் பணி நியமனம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்