TRB PG Tamil Cases Hearing Today. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2014

TRB PG Tamil Cases Hearing Today.


TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 129 வது வழக்காக மீண்டும் இன்று (02.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று (02.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும்இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. 129 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளதுகடந்த வாரத்திலிருந்து தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. திட்டு வாங்கும் TRB
    இன்று challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்தது. இதில் தாள் 1 க்கான வழக்குகள்.3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப் பட்டன.சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண் அளிக்கும் வாய்ப்பு
    இருந்தது.ஆனால் இனிமேலும் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது,மீண்டும் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது எனும் நோக்கங்களில் அவ்வினாவிற்கு மதிப்பெண் அளிக்கப் படவில்லை.தாள் 1 ஐ பொறுத்தவரை அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.

    தாள் இரண்டைமாலை 4.15 மணி வாக்கில் விசாரணைக்கு வந்தது.தாள் இரண்டிற்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப் படும் என்றே தெரிகிறது.குறைந்த பட்சம் ஒரு மதிப்பெண்ணாவது ஆங்கில வினா ஒன்றிற்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனினும் நேரமின்மையால் அவ்வினா குறித்து முழுமையான விவாதம் நடை பெறவில்லை.

    ஒருவேளை நாளைக்கு ஏதேனும் ஒரு மதிப்பெண்ணாவது கூடுதலாக வழங்கப் பட்டால் மீண்டும் re-result,மீண்டும் CV தான்.

    நாளை காலையிலேயே GP அவர்களையும்,வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் experts களையும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    வாதங்களின் போது நீதிபதியிடமிருந்து TRB காரர்கள் வாங்கும் வசை இருக்கிறதே அய்யய்யோ அது நம் காதில் தேனாய் வந்து பாய்கிறது.

    அவர்கள் வசை வாங்குவதற்கு நம்முடைய சாபம்தான் காரணமோ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி