மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்குஅமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2014

மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்குஅமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது - தினமலர்

சென்னை:கற்பித்தலில் சிறந்து விளங்கியதற்காக, மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.முதல் இந்தியர்இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில், 46 பள்ளிகளில் உள்ள 54 ஆசிரியர்களுக்கு, ஈஸிவித்யா நிறுவனம் மூலம், கற்றல், கற்பித்தலில் புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.கற்பித்தலில் சிறந்து விளங்கியதற்காக, அமெரிக்காவின் 'பியர்ஸ்ன் பவுண்டேஷன்' நிறுவனம், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை நடுநிலை பள்ளி ஆசிரியை, ஜரீனாபானுவிற்கு, 'குளோபல் பிரிட்ச் ஐ.டி.,' என்ற விருதினை வழங்கி உள்ளது.

இந்த விருதை பெற்ற முதல் இந்தியர், ஜரீனாபானுதான்.விருது பெற்ற அவரை, மேயர், சைதை துரைசாமி, கல்வித்துறை துணை கமிஷனர் லலிதா ஆகியோர் பாராட்டினர்.விருது ஏன்?கற்பித்தல் சாதனங்களை திறம்பட மற்றும் புதுமையான முறையில் பயன்படுத்தியதற்காக, மாணவர்களின் கற்றல் அம்சங்களை மறுவரையறை செய்ததற்காகவும், வகுப்பறைக்குள் கற்றல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்த நோக்கியா அலைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது போன்ற காரணங்களுக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Final list for tet candidates will be released with in 10 days. Source of news taken from dhinathandhi, kanchipuram edition

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி