இருட்டறை உதவியாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2014

இருட்டறை உதவியாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு.


மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால், இருட்டறை உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதால்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலத்துக்கு, வரும், 9ம் தேதிக்குள் நேரில் வந்து பதிவை சரிபார்த்து கொள்ளலாம்.

இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் காந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கான பரிந்துரைபட்டியல் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் தயாரிக்கப்பட உள்ளது.எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சியுடன், டி.ஆர்.ஏ., (இருட்டரைஉதவியாளர்) பயிற்சி ஆறு மாதம், அல்லது, ப்ளஸ்2 தேர்ச்சியுடன் சி.ஆர்.ஏ., (ஒரு வருடம்) சான்றிதழ் பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

ப்ளஸ்2 தேர்ச்சி பெற்றிருப்பின், உச்ச வயது வரம்பு இல்லை.இதற்கான, உத்தேச பதிவு மூப்பில் முன்னுரிமை உள்ளவர்களான ஆதரவற்றவிதவை, கலப்பு திருமணம் புரிந்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள், மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர்.முன்னுரிமையற்ற பிரிவுகளில், எஸ்.சி.ஏ., (பெண்கள்), 2012, டிசம்பர், 17ம் தேதி வரையிலும், பி.சி.எம்., (பெண்கள்), 2009, செப்டம்பர், 24ம் தேதி வரையிலும், எஸ்.சி.ஏ., (பொது), 2010, அக்டோபர், 5ம் தேதி வரையிலும், எஸ்.டி., (பொது), 2008, மே, 7ம் தேதி வரையிலும், எம்.பி.சி., (பொது), 2010, மார்ச், 1ம் தேதி வரையிலும், எஸ்.சி., பி.சி., பி.சி.எம்., மற்றும் பொதுப்பிரிவினர், 2007, அக்டோபர், 12ம் தேதி வரையிலும்பதிவு மூப்பு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு உடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அனைவரும் வரும், 9ம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு, நேரில் வந்து தங்களது பதிவை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி