உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு.


பல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது.அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றி கணக்கெடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இலவச கல்வி:

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் 462 செயல்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 284அரசு பள்ளிகளில், நகரப்பகுதியில் 140 பள்ளிகளும், கிராமப்புறத்தில் 127பள்ளிகளும் இயங்கி வருகின்றன.தற்போது, அரசு பள்ளிகளுக்கு இணையாக, தனியார் பள்ளிகளும் அதிகரித்து வருகின்றன. ஆங்கில மோகம், கல்வித்தரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான மக்கள் தனியார் கல்வி நிறுவனங்களையே நாடி வருகின்றனர்.

சேர்க்கையில் சரிவு:

ஆண்டுதோறும் கிராமப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக குறைந்து வருகிறது. அதேசமயம், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றவே பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புகின்றனர். மாணவர்களின் கிரகிப்பு திறன், நீண்ட துார பயணம், போக்குவரத்து வசதியின்மைபோன்ற காரணங்களால் கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதை தவிர்க்க விரும்புகின்றனர்.

பற்றாக்குறை:

சில ஆசிரியர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்களின் சிபாரிசின் பேரில், நகர்புற பள்ளிகளிலேயே பல ஆண்டு காலம் பணியாற்றும் நிலை உள்ளது. இது ஒரு புறமிருக்க, சீனியர் ஆசிரியர்கள் பலர், கல்வித் துறை அதிகாரிகளின் கைங்கரியத்தால் நகர் பகுதியிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

போராட்டம்:

இதன்காரணமாக கிருமாம்பாக்கம், நெட்டப்பாக்கம், தவளக்குப்பம், மதகடிப்பட்டு உட்பட பல இடங்களில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

சுற்றறிக்கை:

எனவே, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கடந்த வாரம் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கணக்கெடுப்பு:

ஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கெடுத்து, அறிக்கை தருமாறு தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், காலி பணியிடங்களுக்குஉபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

வசதிகள் இருந்தும்...

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், சீருடை, காலணி, சிற்றுண்டி, சைக்கிள், பாக்கெட் மணி உள்ளிட்ட பல இலவசங்களை அரசு வாரி வழங்கி வருகிறது. அத்துடன், தேவையான கட்டட வசதி, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. எனினும், ஆரம்பக் கல்வியைத் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, படிப்படியாக குறைந்து வருகிறது.

9 comments:

  1. govt job govindaaaaaaa govindaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
    Replies
    1. கல்வி செய்தி நிர்வாகமே தமிழ் நாட்டுல இவ்வளவு பேர் தவிர்த்திக்கொண்டிருக்கும் வேளையில் இதைப்போல மற்ற மாநில செய்திகளை போட்டு எங்களை குழப்பவேண்டாம் ஏனென்றால் தலைப்பை பார்த்த உடனே BP ஏறிவிடுகிறது . இனிமேல் இதுபோல செய்திகளை வெளியிடும் போது பாண்டிச்சேரியில் என்பதை முதலில் போட்டுவிடுங்கள் . PLEASE

      Delete
  2. yellam kuduthu enna punniyam... pillaigaluku paadam sariyaga sollithara maatukraangale.... teachers-lam sernthu intha serial antha serialnu kathathaan pesranga... thayavu seithu tholaikaatchi thodargalai thadai seiyungal.....

    ReplyDelete
  3. Dear Friends,
    Please share your Weightage Mark Physics Major.
    We have searched around 10,000 records. In that there are 75 Physics candidates only Eligible.

    starting 0420000 to 04201500 there are 15 numbers are selected.
    04200218 BC M 59.11
    04200230 BC F 64.78
    04200886 MBC M 63.72(TM)
    04200822 BC F 62.58
    04201154 BC M 61.3
    04201245 BC M 60.26
    04200865 BC F 64.26
    04200565 BC F 60.86
    04200630 BC M 60.71
    04200378 BC F 61.04
    04200441 BC F 60.62
    04200495 BC F 66.93
    04201303 BC F 67.38
    04201402 BC F 62.32

    32206000 to 32207000 there are 7 numbers selected.
    32206020 SCA M 64.76
    32206280 BC F 61.84
    32206296 BC F 63.79
    32206426 BC M 63.35
    32206650 BC F 61.67
    32206935 BC M 65.75
    32206997 BC M 62.26

    Starting 29203000 to 2920600 there are 12 numbers are eligible
    29203920 BC 61.92
    29205185 MBC 65.34
    29205216 BC 68.65
    29203906 BC 59.6
    29205281 MBC 55.18
    29205307 BC 66.77
    29205309 MBC 67.22
    29205520 MBC 63,37
    29205771 BC 59.13
    29203017 BC 64.76
    29203323 BC 66.15
    29203904 BC 61.08(TM)
    29203792 BC 63.15

    starting 32207000 to 32208000 there are 11 numbers are eligible.
    32207094 SC 61.44
    32207138 MBC 63.08
    32207212 MBC 62.77
    32207223 SC 62.28
    32207276 SCA 58.39
    32207288 BC(T) 61.96
    32207476 BC 60.33
    32207559 BC 66.42
    32207645 BC 66.61
    32207722 BC 61.24
    32207813 BC 67.15

    starting 32208000 to 32209000 there are 7 numbers are selected.
    32208220 BC(T) 63.45
    32208224 BC 63.18
    32208380 BC 65.59
    32208505 BC 67.75
    32208690 BC 66.76
    32208733 BC 60.82
    32208803 BC 58.3

    starting 32209000 to 32210000 there are 10 numbers are selected.
    32209032 BC 64.7
    32209085 BC 62.73
    32209091 MBC 60.95
    32209158 BC 56.78
    32209370 BC 61.35
    32209478 BC 66.12
    32209778 MBC 69.86
    32209855 BC(T) 64.5
    32209880 BC 63.35
    32209934 BC 58.75

    starting 32210000 to 32211000 there are 6 numbers are selected.
    32210003 BC 62.65
    32210015 SC(T) 62.64
    32210129 BC(T) 67.49
    32210348 BC 63.43
    32210421 BC 68.84
    32210535 BC 65.48

    from 18203000 to 18203500 there are 7 numbers are there.
    18203002 bc 66.65
    18203053 bc 56.13
    18203094 mbc 64.72
    18203375 bc 63.72
    18203388 bc 67.71
    18203455 sc 57.87
    18203463 mbc 67.34

    With Thanks
    Selvaraj.R &
    Thangamani. D
    thangam.phy89@gmail.com
    selvankl@gmail.com
    09742267262
    7373190299

    ReplyDelete
  4. தலையே ஒரு சுத்து சுத்தீருச்சி ஏம்ப்பா ஆளுக்கு ஆளு பயமுறுத்திரீக

    ReplyDelete
  5. Pavi sir wt 60.63 (women) english major mbc chance iruka?

    ReplyDelete
  6. kanakku pottu kariyam pandrathuna idhudhan Ayya! Senior kalai eduthathan sariyagum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி