மக்கள் பார்வையை ஈர்க்கவைத்த ஆசிரியர் சங்கத்தின் நிகழ்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2014

மக்கள் பார்வையை ஈர்க்கவைத்த ஆசிரியர் சங்கத்தின் நிகழ்வு

பதிவு-3

முதல்வரான ராஜாஜி 1952-ல்
முற்பகல் பள்ளிகளில் கல்வி ; பிற்பகல் தந்தையுடன் சேர்ந்து குலத்தொழில் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்..


இந்தத் திட்டத்தை ஆசிரியர்கள் எதிர்த்தனர்.

சென்னையில் 2-ம் மாநில மாநாட்டை நடத்திக் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினர்.

1953-ல் குலக்கல்வி எதிர்ப்பு மிதிவண்டிப் பிரச்சார அணிகள் தஞ்சையில் இருந்து இராமையாத்தேவர் தலைமையிலும், சேலத்திலிருந்து இராமசாமி ரெட்டியார் தலைமையிலும் புறப்பட்டு சென்னையை அடைந்தன..

அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பும் , ஆசிரியர்களின் போராட்டமும், மக்களின் எழுச்சியும் அரசை நிர்பந்தித்தன.

குலக்கல்வித் திட்டத்தினை அரசு திரும்பப்பெற்றது.

குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு 2 ஆவது மிதிவண்டி அணி , சங்கத்தின் மீது மக்கள் பார்வையை ஈர்க்கவைத்தது..

-வரலாறு தொடரும்..

இளம் ஆசிரியர்கள் உண்மையான இயக்க வரலாறினை தெரிந்துகொள்வதற்காகவும்,
போராட்ட உணர்வினை அவர்களிடம் வளர்க்கவும்
" ஆசிரியர் இயக்க வரலாறு "
என்ற பக்கத்தினை உருவாக்கி  பதிவு செய்து வருகிறேன்  தோழர்களே...

பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும் ஆசிரியர் இயக்க வரலாறு

ஆசிரியர் வரன்களுக்கு- இங்கே சொடுக்கவும் Teachers Matrimony

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி