இந்தக் குறையை நீக்க ஒரு நீண்ட நெடிய பயணத்தை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்துத் தேர்வினை மாநில அளவில் நடத்த ஆரம்பித்து,
ஆசிரியர்கள் பாட வாரியாக தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் வந்த அரசு அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களையும், கால முறை ஊதியத்தை ஒழித்து பணி நிரந்தரம் செய்தது.அதன் பின்னர் பணி மூப்பின் மூலமாக வேலை வாய்ப்பகத்தின் வாயிலாக ஆசிரியர்கள் சிறிது காலம் தேர்வு செய்யப்பட்டனர்.அதன் பிறகு மத்திய அரசின் உத்தரவு மற்றும் கட்டாயக் கல்விச் சட்டப்படி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவித்தது.அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும்தகுதித் தேர்வின் வாயிலாகவே நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.தேர்வு முறை மிகக் கடுமையானது.வினாத்தாள் கடினமாக இருக்கும் என்பதை தகுதித் தேர்வில் வெற்றி பெறும் ஆசிரியர் விழுக்காட்டினை வைத்தே சொல்லிவிடலாம்.அரசுப் பள்ளிகளில் இப்போதிருக்கிற இளம் ஆசிரியர் படை கணினி, ப்ரொஜக்டர்,இணையமெல்லாம் பயன்படுத்தத் தெரிந்த படை. எல்லா தகவல்களையும் தேடி வந்து மாணவர்கள் முன் கொட்டுகிறார்கள்.
மாணவர்களின் சூழலுக்குத் தக்கவாறு தனியார் பள்ளியில் முன்பே பணியாற்றியிருந்தாலும், அரசுப் பள்ளிக்கு வந்தவுடன் தங்களை மாற்றிக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்கள்.அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருவதே இதற்கு சான்று.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி