பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2014

பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது!


பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், எளிதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ் விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் விசாரணை கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறையால் அநாவசியமான காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பவர்களுக்கு, முதலில் கொடுக்கப்பட்ட போலீஸ் விசாரணையின் அறிக்கை வில்லங்கம் ஏதுமில்லாத பட்சத்தில், இரண்டாவது போலீஸ் விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் வந்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்தகுடிமக்கள் ஆகியோர் தற்போது போலீஸ் விசாரணை இல்லாமலேயே விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும் என வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முகேஷ் பர்தேஷி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி