ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்காததற்கு டிஎன்பிஎஸ்சி தாமதமே காரணம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்காததற்கு டிஎன்பிஎஸ்சி தாமதமே காரணம்.


வேலூரை சேர்ந்த ரவீந்திரநாத் யாதவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
டேராடூன் ராணுவ கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். இதற்கான தேர்வில் மாநில அளவில் நான் முதலிடம் பிடித்தேன். ஆனால், எனது விலாசம் தவறாக உள்ளது என்று கூறி தேர்வாணையம் என்னை தேர்வு செய்ய காலதாமதப்படுத்தியது. இதனால், எனக்கு ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. எனது விண்ணப்பம் காலதாமதமாக ராணுவ கல்லூரிக்கு சேர்ந்துள்ளது. அதற்குள் மாணவர்கள் சேர்க்கை முடித்து கல்லூரி தொடங்கிவிட்டது என்று கூறிவிட்டனர். எனவே,எனக்கு ராணுவ கல்லூரியில்இடம் தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:மனுதாரர் கோரிக்கை நியாயமானது. மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அதை ராணுவ கல்லூரிக்கு அனுப்ப தாமதப்படுத்தியது டிஎன்பிஎஸ்சி தான். மாணவனுக்கு இடம்கிடைக்காததற்கு தேர்வாணையத்தின் செயல்தான் காரணம். ஆவணங்கள் மூலம், தேர்வாணையம்தாமதப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது.

ராணுவத்தில் சேர விரும்பியுள்ள மாணவனை, தேர்வாணையம் அலை கழித்து உள்ளது. மாணவனின் எதிர்காலம் கருதி அவனுக்கு ராணுவ கல்லூரியில் உடனே இடம் தர வேண்டும். ராணுவக் கல்லூரியில் சேர்த்து கொள்ளவேண் டும். மாணவனின் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடக்கூடாது. எனவே மாணவணை ராணுவ கல்லூரியில் சேர்த்து கொள்ளவேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி