உலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதி்கரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2014

உலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதி்கரிப்பு.


உலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரஆய்வு தெரிவித்துள்ளது.

உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது அனைவருக்கும் தெரிந்த விசயமே. அதே நேரத்தில் உலக அளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 315 மில்லியனாக உள்ளது என ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கிட்டதட்ட அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு நெருக்கமாக உள்ளது.அமெரிக்காவின் மக்கள் தொகை 318 மில்லியனாகும். சீனாவில் மாணவர்களின் எண்ணிக்கை 252ஆக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மாணவர்களின் எண்ணிக்கை உலகளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.மேலும் இந்தியாவை பொறுத்த மட்டில் பகுதிநேர தொழிலில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணி்க்கை 9.5மில்லியனாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆறு மாதத்திற்கு மேல் ஒரு தொழிலில் நீட்டித்து இருப்பதி்ல்லை எனவும் தெரிவிக்கிறது.அதிகரித்து வரும் கல்விக்கடன் மற்றும் குடும்பபொருளாதார நெருக்கடி போன்றவை காரணமாக பணியில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் ஆண்களாகவும் மீதமுள்ளவை பெண்களாகவும் உள்ளதாகஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி