காளிச்செட்டிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர் பணியிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எருமப்பட்டி யூனியனில், 38 துவக்கப்பள்ளி, ஒன்பது நடுநிலைப்பள்ளி, ஐந்து அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி, ஒரு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி என, 53 பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், காளிசெட்டிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி, கடந்த, 2002ம் ஆண்டு துவக்கப்பள்ளியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர், இரண்டு இடைநிலை ஆசிரியர் பணியாற்றி வந்தனர். மாணவ, மாணவியரில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 70 பேரும், ஆறாம் முதல், எட்டாம் வகுப்பு வரை, 36 பேரும் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கவுன்சலிங் மற்றும் பணி நிரவல் முறையில், ஒரு ஆசிரியை மாவட்ட இடமாறுதல் கேட்டு சென்று விட்டார். மீதமுள்ள, ஒரு தலைமையாசிரியர் மற்றும் மூன்று பட்டதாரி ஆசிரியர் ஆகியோர், ஐந்து முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 51 மாணவருக்கு வகுப்பு எடுத்து வருகின்றனர். ஒரு இடைநிலை ஆசிரியர், ஒன்று முதல், நான்காம் வகுப்பு வரை படிக்கும், 58 மாணவருக்கு வகுப்பு எடுத்து வருகிறார். அரசின் விதிமுறைப்படி, 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என இருந்தும், 58 மாணவருக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுப்பதால், மாணவரின் கல்வித்தரம் பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, எருமப்பட்டி யூனியன் செயலாளர் ராமராசு கூறியதாவது: எருமப்பட்டி யூனியனில், தற்போது, 11 உபரி ஆசிரியர் வெவ்வெறு பள்ளியில் வகுப்பு எடுத்து வருகின்றனர். அவர்களில், ஏதாவது ஒரு ஆசிரியரை இடமாற்றும் செய்து, காளிசெட்டிப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பணிநிரவல் மற்றும் இடமாற்ற கவுன்சலிங்கில், ஒரு இடைநிலை ஆசிரியை வேறொரு பள்ளிக்கு சென்றுவிட்டதால், 58 மாணவரை ஒரே ஆசிரியர் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, காலிப்பணியிடத்தை நிரவல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி