புதியதோர் கல்வி செய்வோம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2014

புதியதோர் கல்வி செய்வோம்...


ஓரு சமுதாயம் சிறப்புடன் வாழ மற்ற எல்லாக் காரணிகளையும்விட கல்வி மிகமுக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. சிலநேரங்களில் நாம் அளிக்கிற கல்வியே நம் சமுதாயம் பின்தங்கிப் போவதற்குக்காரணமாகிவிடும்.
எனவே, நம் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட கல்வி தேவை என்பதை நாம் சரியாகநிர்ணயிக்க வேண்டும்.

நம் சமுதாயம் மேம்பாடு அடையவும் நம் மாணவர்கள்எதிர்காலத்தில் தரமான குடிமக்களாக வாழவும் நாம் தருகிற கல்வி உதவவேண்டும். இன்றைய நிலையைக் கூர்ந்து ஆராய்ந்தால், பொறுப்புள்ளகுடிமக்களாக அவர்கள் உருவாக இந்தக் கல்வி முறை உதவி செய்கிறதா என்றால்இல்லை.இன்று நம் கல்வியில் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் சமூகத் தேவை சார்ந்துஇல்லாமல் சந்தைக்கான அறிவுசார்ந்து இருக்கிறது.

தவிர, நம் தேவைகளை எல்லாநிலைகளிலும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு மாணவர்களை உருவாக்கவில்லை.சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடிய கிரியாஊக்கிகள்தான் மாணவர்கள். ஆனால், அப்படிப்பட்ட சிந்தனையில் இன்றுமாணவர்களை நாம் உருவாக்கவில்லை.புதிய பொருளாதாரக் கொள்கையால் பொருளாதாரம் உத்வேகம் எடுத்து வருவதால்,சந்தைப் பொருள்கள் உற்பத்திக்கு மனிதவளம் தேவைப்படுகிறது.

அதைப் பூர்த்திசெய்ய இன்று மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். ஆதலால் வணிகப்பார்வையைஉள்ளடக்கிய ஒரு கல்வியைத் தர முடிகிறதே தவிர, மானுடமேம்பாட்டுப்பார்வையைக் கொண்ட கல்வியை நம்மால் தர முடியவில்லைஎன்பதைத்தான் பார்க்கிறோம்.வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதவளம் பெருக்க அரசாங்கத்தால்இயலாத நிலையில் தனியாரை இந்தத்துறையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில்நாம் அனுமதித்தோம்.இன்றைய சூழலில் எப்படி அரசாங்கம் சந்தைச் செயல்பாட்டில் வணிகநிறுவனங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதோ, அதேபோல் இந்தக் கல்விநிறுவனங்களையும் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது.

இன்றைய கல்விச் சாலைகளிலிருந்து வெளியேறும் மாணவர்களின் ஒரு கூட்டம்,எப்படியாவது பணம் சம்பாதிப்பது என்ற குறிக்கோளைக்கொண்டு சந்தைக்குள்செல்கின்றனர்.இன்னொரு கூட்டம், வழங்கிய பட்டங்களை வைத்துக் கொண்டு வேலையில்லாதோர்சந்தையில் சேர்ந்து , சமூகத்தை அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழல்தொடர்வது ஒரு சமூகத்துக்கு நல்லதல்ல.கல்வியை முறைப்படுத்துவதன் மூலம்தான் நம் எதிர்காலத்தை வளமானதாக்கமுடியும். கல்வி இன்று பொதுப்பட்டியலில் இருப்பதால் அது சிக்கல்நிறைந்ததாகவே இருக்கிறது. இருந்தபோதும் அதில் தமிழக அரசு முயற்சிமேற்கொண்டால் நிச்சயமாக நம் தமிழகத்தை மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக ஓர்அறிவுசார்ந்த, திறன் வாய்ந்த, சமுதாயமாக உருவாக்க முடியும். அதற்குநமக்கு இப்பொழுது ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இதற்கு நாம் முதலில் நம் கல்வியின் குறிக்கோளை வரையறை செய்ய வேண்டும்.ஒன்று, படித்த அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும். இரண்டு,சமுதாயத்துக்குத் தேவைப்படும் மனித வளத்தை நம் கல்வி உருவாக்கித் தரவேண்டும். மூன்று, ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திடும்வகையில் நம் மாணவர்களை நம் கல்வி உருவாக்க வேண்டும். நான்கு, மானுடஒழுக்க நியதிகளைக் கடைப்பிடிக்கும் மனோபாவம் கொண்டவர்களாக மாணவர்கள்கல்விச் சாலைகளிலிருந்து வெளியேற வேண்டும். ஐந்து, இன்றைய சூழலில் புதியபொருளாதாரக் கொள்கையில் வருகிற வாய்ப்பைப் பயன்படுத்தவும், சவால்களைஎதிர்கொள்ளவும் நம் மாணவர்கள் தயார் செய்யப்பட வேண்டும். ஆறு, உலகில்உருவாகும் அறிவுப் பொருளாதாரத்தில் பெருமளவு பங்கேற்கக் கூடிய ஆற்றல்மிக்க அறிவுசால் மாணவர்களை உருவாக்க முனைவதையும் அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.

இந்த ஆறு அடிப்படையான குறிக்கோள்களை வைத்து ஒரு புதிய கல்விக் கொள்கையைதமிழகத்தில் உருவாக்கி, ஐந்தாண்டு காலத்தில் ஒரு இயக்கம்போல்செயல்பட்டால் உலகத் தரம் வாய்ந்த மனித ஆற்றலை நம் தமிழகம் தயார்செய்துஇந்தியாவுக்கு வழிகாட்டலாம். இதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியதுகல்வியை ஆரம்பக்கல்வியிலிருந்து, பல்கலைக்கழக உயர்கல்வி மற்றும்ஆராய்ச்சி வரை உயிரோட்டமாக இணைப்பது.அடுத்து நம் கல்விச் சாலைகளை ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்நிலைக் கல்விவரை சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும்நிறுவனங்களுக்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் ஆற்றலை வளர்க்கவடிவமைக்க வேண்டும். அப்படிச் செயல்படும் போதுதான் தொழில் தேவைகளுக்கானமாணவர்களை தேவையான ஆற்றல்களுடன் உருவாக்க முடியும்.

பொருளாதாரத் தேவைகளுக்குப் பணியாற்றும் நிறுவனங்களின் தேவைகளுக்குஈடுகொடுக்க, நம் கல்வி நிறுவனங்கள் அந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவேண்டும்.இன்று சந்தையில் தரமான ஆற்றல் கூட்டப்பட்ட மாணவர்களுக்குத் தேவை எல்லைஇல்லா அளவுக்கு உள்ளது. இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு நம்கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தயார்செய்வது இல்லை. மாறாக, பட்டங்களைஅள்ளி வழங்குகிறது. வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் புதுப்புதுவேலைகளுக்கும் தொழில்களுக்கும் திறன் வாய்ந்த ஆள்கள் கிடைக்காமல்நிறுவனங்கள் தவிக்கின்றன.சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குத் திறன் உள்ள மாணவர்களைநம் கல்வி நிறுவனங்கள் உருவாக்கவில்லை. எனவே, இன்றைக்கு எண்ணிக்கையில்அதிக அளவில் உள்ள இளைஞர்களை ஆற்றல் படைத்தவர்களாக நம் கல்விச்சாலைகள்மாற்றித் தந்துவிட்டால் உலகப் பொருளாதாரத்தில் நம் பங்கு தவிர்க்கஇயலாததாக மாறிவிடும்.நாம் இன்று இதற்கான சூழலை எப்படி உருவாக்க முடியும் என்று எண்ணும்போதுஜெர்மனி நாட்டின் கல்விமுறையில் இயங்குகிற இரட்டைமுறை வாழ்க்கைத் தொழில்கல்வி என்பது என்னைப் பெரிதும் கவர்ந்தது.

இந்தக் கல்வி முறையானதுசமூகத்துடன், தொழில்களுடன், வணிகத்துடன் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்திசமூக தொழில் மற்றும் வணிக மேம்பாட்டுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்வதாகவும், படித்த அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்கவாய்ப்புள்ளதாகவும் உருவாக்கப்பட்ட ஒன்று.

கல்விச்சாலைகளை தொழில் நிறுவனங்களும் அரசாங்கமும் கண்காணித்து தரமானமாணவர்களைத் தேவைக்கு ஏற்றாற்போல் தயார் செய்கின்றன. இரண்டுநாள்கல்விச்சாலையில் பயின்ற மாணவர்கள், மூன்று நாள்கள் தொழில்சாலையில்பயிலுகின்றனர்.இதன் விளைவு, சமூகத்துக்கு என்ன தேவையோ அவைகளைப் பூர்த்தி செய்யத்தேவையான திறன் பெற்ற மாணவர்களை உருவாக்கித் தந்துவிடுகின்றனர். ஒரு கம்பிவேலை செய்யக்கூடியவர், அவர் செய்கிற வேலை என்பது மிகவும் தரமானது. எனவேஅவர் கூலியும் உயர்ந்தது.எனவே, ஒரு தொழில்கல்வி கற்று வேலையில் இருப்போர் மதிக்கத்தகுந்த வாழ்க்கைவாழ்வதைப் பார்க்கும்போது அதை ஏன் தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடாதுஎன்பதுதான் என்னுடைய அடிப்படையான கேள்வி.இந்த வாழ்க்கைத் தொழில்கல்வி என்பது பள்ளிக்காலத்திலேயேதொடங்கிவிடுகிறது. உயர்கல்விக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் தரமானவாழ்க்கை வாழ அவர்களின் திறன் அதிகரிக்கப்பட்டு வேலை கிடைக்க வழிவகைசெய்துவிடுகின்றனர். இந்தக் கல்விமுறை மிகவும் கடினமான முறைதான், ஆனால்பலன் அளிக்கவல்லது.

இந்த வாழ்க்கைத் தொழில் கல்வியை இந்தியாவில் பரிசோதிக்க இப்போது நம்மத்திய அரசு ஜெர்மானிய அரசுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இன்றைய தமிழக அரசு புதிய திசையில், வளர்ச்சிப்பாதையில் தமிழகத்தைஇட்டுச்செல்ல முயற்சிப்பதால், தமிழகத்திலிருந்து ஒரு குழு ஜெர்மனிக்குவந்து இந்த முறையைக் கூர்ந்து ஆய்வுசெய்து பார்த்துவிட்டுநடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கலாம். நம் கிராமப்புற படித்த, படிக்காதஇளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி விடலாம்.இதற்கான உதவியைச் செய்ய ஜெர்மானிய அரசு நல்ல மாநிலங்களையும்,நிறுவனங்களையும் தேடி வருகிறது. தமிழகம் முயற்சித்தால் நிச்சயம் நன்மைபயக்கும்.இதில் மிகப்பெரிய பொறுப்பு தொழிற்கூட்டமைப்புகளுக்கு உள்ளதால், இந்தத்திட்டத்தில் அவர்களும் இணைக்கப்பட்டு அனைவரும் சேர்ந்து இந்தப் புதுமுயற்சியை மேற்கொண்டால் தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம்இருப்பதாகவே தோன்றுகிறது.இதற்கு பரீட்சார்த்தமாக ஒரு சில தொழில்மயமான மாவட்டங்களில் பரிசோதனைசெய்து பார்த்துவிட்டுக்கூட தமிழகம் முழுமைக்கும் நாம்நடைமுறைப்படுத்தலாம்.

இந்த முறையை கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில்சோதனை செய்து பார்க்கலாம்.சுருங்கச் சொன்னால் சீனப்பழமொழி சொல்வதுபோல் மீன் தருவதற்குப் பதில் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் இந்தத் திட்டம். சான்றிதழ் வழங்குவதுஅல்ல, திறன் வழங்கி ஒரு பணிக்குத் தகுதியுடையவராக மாற்றிவிடுவதுதான்இந்தத் திட்டம்.இந்தத் திட்டத்தின் மூலம் தொழில்களுக்கான, வேலைகளுக்கான தரமானபணியாளர்கள் அந்தந்த நிலைகளுக்கு ஏற்றவாறு, நிறுவனங்களுக்கேற்றவாறு கல்விநிறுவனங்களால் தயாரிக்கப்படுவார்கள்.இதன் மூலம் நம் மனிதவளத் தேவைகளும் பூர்த்தியாகும்; மாணவர்களுக்கும் வேலைகிடைக்கும்; அத்துடன் நம் பொருளாதாரமும் மேம்படும். சமூகத்தில் வேலைஇல்லாத் திண்டாட்டமும் குறையும்.

இந்தப் புதிய முயற்சிக்கு வித்திடுமாநம் அரசு?

Article by
* suruli vel
*

37 comments:

  1. நிச்சயம் மாறும், மாற்றம் ஒன்றே மாறாதது!!!

    ReplyDelete
    Replies
    1. சட்டசபை 4 நாள் விடுமுறை இனி 30ஆம் தேதி தான் நடைபெறும்.

      Delete
  2. Neengal solliavaru Germany muraiyil
    tholil sarndha kalvi varaverkkappada
    vendiathuu enbathu sarie Anal namathu manilathai poruthavarai
    padjthavarkal Govt.udhyokam allathu
    thaniar.udhyokam pondra clerkikal
    velai thaan seyyavendum ena ninaikkirarkal.. Indha mentality mudhalil maravedum.Secondly Govt.
    thaniar pallikalai ookkuvikkakoodadhu
    avarkal manavarkalai oru mark edukkum mechin aakathaam manavrkalai thayar seykirarkal.enave
    pvt.school students kku padaputhakathi ullathai thavira veru ethuvum adhavathu nattu ndappu
    patri avarkalukku edhuvum therivathillaiSo govt.pvt.pallikalai ookkuvikkamal neengal sonnamathiriyana padathittathinai matri govt pallikalukku innum adhika alavil ookkam alithu govt palliyil padithavarkalukku velaivaaippil govt.matrum thaniar thuraiyil munnurimai alithal nichayam munnetrm erppadalam.enbathu enathu karuthu .Naan sonnathil thavaru iruppathaka karuthinal
    please ignore it.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Flash News; இடைநிலை ஆசிரியர் அறிவிப்பு இல்லை, மற்ற ஆசிரியர்கள் பணிநியமனம் தாமதம் - கலைஞர் அறிக்கை

    ReplyDelete
  5. s ipam tha intha arasial person kul elam therithu pola but assembly 4 days leave la irukanka inuma 30 tha athukula alam maranthduvanka

    ReplyDelete
  6. tamilnadil admk athciku vantha udan ithu varai 6 kalvi amacherkal mari irukarkal epadi therium intha thurail ena nadaku endru atha avarke theriavilai evlo vaccancy irukunu pavaum avrae kulampi poitar pola atha mumuku pin muranaka sataperavila solitar ithunala ivlo kulapma kondu irukirathu intha kalvi department il

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பா்களே...

    கருணாநீதி (ஐயா) அவா்கள் அறிக்கை:
    இடைநிலை ஆசிாியா் நியமனம் என்பது கடந்த சில ஆண்டுகளாக- குறைவாகவும் அவா்களின் தற்போதைய நியமனம் கேள்விக் குறியாக இருப்பதை உணா்ந்து இன்று தமிழக அரசுக்கு (அம்மா) விரைந்து தகுதித் தோ்வில் வெற்றி பெற்றோரை பணியில் அமா்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக தகவல்.
    செய்தி: 'பாலிமா்- News' & See all news chennal..
    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. Ivlo nal onum solala, ipa yena akarai karunanidhiku, next electionku , ipavae namala vachu play panraru 2016 electionku, ivaru cm irukrapa yevlo post potaram, ipa pesuraru silenta irunthalae cm amma post poduvanka tet pass pana yelarukum

      Delete
    2. Yes..
      We are all expect that happy news only...
      atleast increase our posting...
      Thanks friends..

      Delete
  9. ஆசிரியர் பணி காலி இடங்களின் எண்ணிக்கையை அமைச்சர் ஏற்றி இறக்கி கூறுவதாக கருணாநிதி குற்றச்சாட்டு - சன்நியுஸ்

    ReplyDelete
    Replies
    1. Yes..
      Thanks Mr. Kalai Selvan..
      உண்மையே...
      ஐயா ஆட்சியிலிருக்கும் போது இடைநிலையாசிாியா்களின் நலன் காக்கப்பட்டதாகவும் ஆனால் தற்பொழுது ஆட்சியில் அவா்களின் பணிநியமனம் காலதாமதமாகவும் மற்றும் பணிநியமன அறிவிப்பு - மிதகுந்து முரண்பாட்டுடன் அறிவிப்புளும் வெயிட்டு வருவதாக நிகழும் ஆட்சி மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளதாக செய்தி...
      நன்றி...

      Delete
  10. Satheesh nanparae tamil vacant increase akuma, my wt 63.2,bc community, Dob 16.5.1984, tamil major job kidaika chance iruka reply me pls pls, wait for ur comment

    ReplyDelete
    Replies
    1. தமிழ்த்துறை காலிபணியிடங்கள் அதிகரிக்கும் நண்பரே இருப்பினும் நீங்கள் இதையே நம்பிகொண்டு இருக்காமல் குரூப் 4 தேர்விற்க்கு தயாராவது சிறந்தது நானும் ஆகஸ்ட் மாதம் முதல் தயாராக போகிறேன் நண்பா

      Delete
    2. Thanks nanparae, nanum group 4ku ready aytan

      Delete
  11. suruli sir,

    very good article.i am in-meenakshi temple madurai.i pay for you all teachers.

    ReplyDelete
  12. கேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப் 
    படுகிறதே? 

    கலைஞர் :- கடந்த 17-7-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகிய மூன்று முக்கிய மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மூன்று முக்கியத் துறைகளும் பேரவையிலே ஒரே நாளில் அவசர அவசரமாக விவாதிக்கப் பட்டுள் ளது என்பதில் இருந்தே, இந்தத் துறைகளின்பால் இந்த ஆட்சியினருக்கு உள்ள ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

    கழக ஆட்சியில் மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டு, இந்த மூன்று துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டதற்கு மாறாக தற்போது ஒரே நாளில் மூன்று துறைகளுக்கான மானியங்கள் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானிய விவாதத்தின் போது பல முக்கிய அறிவிப்புகளை ஆசிரியர் சமுதாயம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. குறிப்பாகப் பள்ளிகளில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத் தும் மாணவர் நலன் - முன்னேற்றம் கருதி நிறைவு செய்யப்படும் என்றும்; முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத் திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறி விப்பார்கள் என்றும் ; அ.தி.மு.க. அரசு ஏற்கனவே அறிவித்தவாறு 61 மாணவர்களுக்கே 3 ஆசிரியர் கள் நியமிக்கப்படுவர் என்றும் ; மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டு 1,268 பள்ளிகளை மூடும் திட்டம் கைவிடப்படும் என்றும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தப்படும் என்றும்; இவை அனைத்தையும் நிறைவு செய்திடும் வண்ணம் தேவையான அறிவிப்புகள் எல்லாம் அணி அணியாக வரப் போகிறதென்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

    பள்ளிக் கல்வி அமைச்சர், இடை நிலை ஆசிரியர்கள் அல்லாத 3,459 புது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. அ.தி.மு.க. அரசு அமைந்து மூன்றாண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் இந்தப் பள்ளிக் கல்வித்துறை ஆறு அமைச்சர்களைக் கண்டிருக்கிறது என்ற ஒன்றே இந்தத் துறையின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டும். 

    பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக முதலில் பொறுப்பேற்ற சி.வி. சண்முகம், அவர் அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார். சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து இந்தத் துறையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு வார காலமே அந்தத் துறையின் அமைச்சராக இருந்தார். அவர் 55 ஆயிரம் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுவிட்டார்கள் என்று, திடீரென்று ஒரு போடு போட்டார்; அ.தி.மு.க. ஆட்சியில் புதிய தாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை பற்றி, அவரிடம் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே, அவரிடமிருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டு, அமைச்சரவையிலிருந்து கழற்றி விடப்பட்டார். அவரைத் தொடர்ந்து என்.ஆர். சிவபதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரானார். அவரோ முன்னர் செய்யப்பட்ட அறிவிப்புகளை ஆராய்ந்து பார்க்காமல், 26 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப் போகிறோம் என்றார். சில நாட்களுக்குப் பிறகு விழிப்புணர்வு பெற்றவரைப் போல, அவரே 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். 

    சிவபதியைத் தொடர்ந்து நான்காவது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக வைகைச் செல்வனும், ஐந்தாவது அமைச்சராக என்.எஸ். பழனியப்பனும் பொறுப்பிலே இருந்த போது “நமக்கேன் வம்பு” என்று ஆசிரியர் நியமனம் பற்றியே எதுவும் கூற வில்லை. ஆனால் அப்போது ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. அரசு 64 ஆயிரம் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நியமித்துள்ளது என்றார். இன்று அவர் இருக்குமிடம் தெரியவில்லை. 

    இன்றைய பள்ளிக் கல்வி அமைச்சர் 12-7-2014 அன்று ஒரு விழாவில் பேசும் போது, கடந்த மூன்றாண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார். ஆம் ;10ஆம் தேதி பேரவை தொடங்கிய பிறகு அமைச்சர் செய்த அறிவிப்பு இது!

    ஆனால் இதே அமைச்சர் கல்வி மானியக் கோரிக்கையின் விவாதத்தின் போது 3,459 ஆசிரியர்கள் மற்றும் 415 ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்திருக்கிறார். எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ அ.தி.மு.க. அமைச்சர்களால்!

    ReplyDelete
    Replies
    1. Super.. Well sir.. Thanks.

      Delete
    2. KALAI SIR................Neengale nenaichalum kalviseithi and it's freinds ku news tharama erukka mudiayuthu...........it is your good nature............thanks for ur information................

      Delete
  13. ஒரு சந்தேகம்.

    30 ல் இறுதிப்பட்டியல் ...
    புதிய காலி பணியிடம் சேர்த்து அல்லது .....

    ReplyDelete

  14. உண்மையில் எத்தனை ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் சங்கத்தாரைக் கேட்டால் மிகக் குறைவாகக் கூறுகிறார்கள். கல்வி மானியத்திற்குப் பதிலளித்த அமைச்சர், இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக எதுவும் கூறாததால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். 

    ReplyDelete
  15. y first final list varamanu papaom ivanka panara kamapdi a patha santhekama iruku enaka ivankale venumnu thali podra mathri iruku matha anaithu katchukalum sernthui kural kural kudutha tha ithuku vimochanam keadikum , but we r unlucky bcz inuma sataperavai 30 tha armoikanak avankauluku holiday vitutanka romap veali senchi kalachitankala

    ReplyDelete
  16. Please tv watch news and update the news here."!"

    ReplyDelete
  17. Replies
    1. welcome you sir!!!
      At least now, we are able to hear your voice for us!!!

      Thanking you...

      Delete
    2. tel me the complete web id

      Delete
  18. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=126001

    ReplyDelete
  19. ஏன் பிறந்தாய்? வாத்தியாரே[SGT TEACHER] ஏன் பிறந்தாய்? இல்லையென்று, வாத்தியார் ஏங்கும் மாநிலம் பல இருக்க தமிழகத்தில் ஏன் பிறந்தாய்? அன்பு வாத்தியாரே[SGT TEACHER] BY தற்கொலைககான நேரத்தை எதிர்நோக்கும் paper 1 candidate இச்சூழ்நிலையிலும் next groub 4 ல் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Super suruli sir! hats off you.

    ReplyDelete
  22. Verry nice article surili sir ...
    மீன் கொடுப்பதை விட
    மீன் பிடிக்க கற்று கொடுப்பது சிறந்தது.
    திறன் வாய்ந்த சமுதாயத்தை உருவாக்க இயன்றதை செய்வோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி