பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி மறுப்பு: காற்றில் பறக்குது அரசாணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி மறுப்பு: காற்றில் பறக்குது அரசாணை


தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளை கூடுதலாககண்காணிப்பதற்கு அரசாணை வெளியாகியும் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுப்பதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர், உடற்கல்வி, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என வாரம் மூன்று நாட்கள் ஒன்பது மணி நேரம் மாதம் 32 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பணி நியமனத்தில் தெரிவிக்கப்பட்டது. தவிர காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் மூன்று பள்ளிகள் வரை பாடம் நடத்த அனுமதி வழங்கவும் அரசாணை வெளியானது.இதன் மூலம் சிறப்பாசிரியர்களின் மாதச்சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இதனால் தனியார் பள்ளிகளில் பணியாற்றிய பெரும்பாலானோர் பகுதிநேர சிறப்பாசிரியர் பணியில் சேர்ந்தனர்.
ஆனால் அறிவித்தபடி பெரும்பாலான மாவட்டங்களில் காலிப்பணியிடம் இருக்கும்பட்சத்திலும் கூடுதலாக பயிற்சி அளிக்க சிறப்பாசிரியர்களை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 540 சிறப்பாசிரியர்கள் பணிபுரிகின்றனர்.இதில் ஓவியம், கம்ப்யூட்டர், இசை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் உள்ளது. இப்பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் கூடுதலாக பணியாற்ற அனுமதி வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லை என சிறப்பாசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இப்பணியிடங்களை நிரப்ப மாற்று ஏற்பாடு செய்யாவிடில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறமைகள் முடங்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க செயலர் ராஜாதேவகாந்த் கூறுகையில், "பணி நியமனம் வழங்கிய போதே மூன்று பள்ளிகள் வரை பணியாற்ற அனுமதிப்பதாக தான் கூறப்பட்டது. இதுவரை ஒரு பள்ளியில் தான் பணியாற்றி வருகிறோம். தவிர சில பள்ளிகளில் மற்ற பாடங்களை கையாளுதல், அலுவலக பணி, தேர்வுக்கூட கண்காணிப்பு பணிகளிலும் கூடுதலாக பணிபுரிய கட்டாயப்படுத்துவது அதிகரித்துள்ளது. காலிப்பணியிடம் இருக்கும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை கூடுதலாக நியமிக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.

27 comments:

  1. adidavidar kallar schoola athe community teachersthan appoint pannuvangalame? rajalingam sir ethu unmaiya?

    ReplyDelete
    Replies
    1. திருமதி /செல்வி மலர் அவர்களே.....
      பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகளை பொறுத்தவரை அனைத்து இனப் பிரிவுகள சார்ந்த ஆசிரியர்கள் பனி நியமணம் செய்யப்படுவார்கள்.....
      ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை பொறுத்தவரை ஆதிதிராவிடர் இனப்பிரிவை சார்ந்தவர்களை மட்டுமே பணியிடம் செய்யப்படுவார்கள்....
      மாநலராட்சி பள்ளிகளை பொறுத்தவரை அனைத்து இனப்பிரிவை சார்ந்தவர்களை பணியிடம் செய்யப்படுவார்கள்.....

      Delete
  2. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

    Pls send ur mobile no.
    rlakthika@gmail.com

    ReplyDelete
  3. Mr. Rajalingam sir, any community teachers are eligible to appoint in Adhi-dravidar welfare schools. My friend other than sc community is working in Adhi-dravidar welfare school.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதில் எனக்கு வேறுபட்ட கருத்து எனக்கு உள்ளது நண்பரே......
      ஏனெனில் 2010ம் வருடம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் என் நண்பரோடு சேர்த்து 65பேர் பணிநியமனம் செய்யப் பட்டார்களாம்.......
      அவர்கள் அனைவரும் ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர்களாவர்........

      Delete
    2. Ennudaiya nanbar adi dravidat
      R nalathuraiyil pani purigirar. Anal avar mbc

      Delete
  4. Hai history friends i am hari me too history my watge 62.03 belongs to sc comunity. Pls share ur watge throuh my mob no or sms me. Through that we can calculate our opening watge and end watge approxmatly. Already i have some of our friends datas. This i am doing for our goodness nly. Pls co~oprate with me friends. My mob no: 8939095222

    ReplyDelete
  5. TAMIL PAADAP PIRIVINIL BCM ULLAVARGAL THANGAL WEIGHTAGE PATHIVIDA MUDIYUMA??

    ReplyDelete
  6. Raja barathi your mobil no please

    ReplyDelete
  7. rajalingam sir ennoda ennoru questionku pathil sollunga plz... dnc nu oru community erukku athukku reservation % erukka ellaya? sca bcm ku ul othukkedu erukku anal dnckku ellaya bcoz nan dnc community( madurai-devarcommunity) i wait ur reply

    ReplyDelete
    Replies
    1. DNC entra oru community iruku but athukkunu thani ida othukkedu illa madam....
      Becoz DNC enpathu MBC entra pattiyalil adangum oru inappirivu.....

      Delete
    2. Rajalingam sir plz tel me,wtg61.45 oc..male.english chance erukuma

      Delete
  8. appaam ethukku sir ennoda community certificatela dncnu podanum mbcnu pottu erukkalame? maduraila kallars schoolne erukku sir intha dnc community than kallarnu solluvanga

    ReplyDelete
  9. nan solvathil ungalukku dout erunthal kallars school in madurainu pottu search pannunga detail varum but antha details enakku puiyala ungalukku purinthal padiththu sollavum rajalingam sir

    ReplyDelete
    Replies
    1. Enga tirunelveli districtla DNC hr sec school irukku mam...enaku nalla therium mam....antha DNC school ungaluku priority irukum

      Delete
  10. rajalingam sir w r u? i wait u reply

    ReplyDelete
  11. Only scheuled caste trs appointed in adi diravidar welfare schools

    ReplyDelete
  12. Only scheuled caste trs appointed in adi diravidar welfare schools

    ReplyDelete
  13. MR. RAJALINGAM SIR, SATHEESH KUMAR SATHEESH, SRI ONLY FOR U , VIJAYAKUMAR CHENNAI MR. MANI SIRS, THANKS FOR UR MOTIVATION FOR ALL TET CANDIDATES.,

    BUT WHAT WE CAN DO ? IYARGAIYAI ONDRUM MATTA MUDIYATHU., WE ARE

    EAGERLY EXPECTING POSTING INCREASE AAGUM ENDRUM, KURAITHATHU 20000 POSTING-AAVATHU VARUM ENDRU EDHIRPARTHOM., PARAVAYILLAI.,

    CASTWISE AND SUBJECTWISE LIST VANDHAL THERIYUM., PARPPOM., WE

    ARE WAITING FOR JULY 17TH ., 10-1 PM.,

    I THINK THEY ARE ANNOUNCED POSTING INCREASE AAGUM JULY 17TH ANDRU., BECOZ., IN TRICHY THEY ARE VACANCY LIST TAKEN BY CONCERN DEPT., EXCESS LIST AND UPARI LIST AND VACANT LIST., IT WILL TAKEN .,

    PARPPOM., KANDIPPAKA NALLA MUDIVU POSTING INCREASE AAGUM., WE PRAY GOD., GOOD NIGHT FRIENDS.,

    ReplyDelete
    Replies
    1. Velmurugan sir thankyou......god nammala kai Vida maattar sir...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Dear mr rajalingam can u explain plz about tje meaning of vacancy list ( w,ph,v,iv)

    ReplyDelete
  16. Rspctd rajalingam.. Pls CLR doubt. As per Current notification in tet oc is there. In that OC open category or other community

    ReplyDelete
  17. Rajalingam sir solunkaane solunka thukam pochu final list vara thatium thukame vara mdaiku plzclear my above mention doubt

    ReplyDelete
  18. History MBC wtg 59.56 any chance

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி