காமராஜர் திரைப்படத்தை இணையத்தில் பார்க்க இங்கு சொடுக்கவும்
தமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல்திரைப்படமாக வெளியானது.
அரசியல் மற்றும் கல்வியாளர்களின் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தற்போது மீண்டும் பள்ளிகளில் திரையிட தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிக்கெட்டுகளை செய்தித் துறை அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஒரு நபருக்கு ரூ.10 என்ற விலையில் டிக்கெட் அச்சிடப்பட்டுள்ளது.
தியேட்டர் உள்ள நகரங்களில் மாணவர்கள் தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், தியேட்டர் இல்லாத ஊர்களில் பள்ளி வளாகத்திலேயே படம் திரையிடப்படும் என்றும் செய்தித் துறை அறிவித்துள்ளது. ஆனால், படம் திரையிடப்படும் தேதி விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி