சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது.
முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், ஆர்வம் காட்டினர்.உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, கடந்த மாதம், 27ம் தேதிமுதல் தள்ளி வைக்கப்பட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு, 10 நாள் இடைவெளிக்குப் பின், நேற்று துவங்கியது. 2,350 மாணவர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், பல்கலையில் குவிந்ததால், பல்கலை வளாகம், ஒரே பரபரப்பாக இருந்தது. காலை,9:00 மணிக்கு, முதல் சுற்று கலந்தாய்வு துவங்கியது. 'ரேங்க்' பட்டியலில், முதல் நான்கு இடங்களை பெற்றிருந்த மாணவர்கள், ஏற்கனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்து விட்டனர். இதனால், அடுத்த இடங்களில் இடம் பெற்றிருந்தவர்கள், 'ரேங்க்' வாரியாக, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். முதல், 10 மாணவர்களில் 6 பேர், அண்ணா பல்கலையின்,கிண்டி பொறியியல் கல்லூரியை தேர்வு செய்தனர். இவர்களில் 5 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவை தேர்வு செய்தனர்.ஒருவர், மெக்கானிக்கல் பாடப் பிரிவை தேர்வு செய்தார். அடுத்த நான்கு பேர், கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரியை தேர்வு செய்தனர். பத்து மாணவர்களுக்கும், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், சேர்க்கை உத்தரவுகளை வழங்கினார். தொடர்ந்து, அடுத்தடுத்த சுற்று கலந்தாய்வு நடந்தது. நேற்று, 'கட் - ஆப்' மதிப்பெண், 200ல் துவங்கி, 198.75 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.தொடர்ந்து, ஆக., 4ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு மூலம், 2,10,653 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆனால், 1,68,963 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியது குறித்து, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜிடம் கேட்டபோது, ''முதல் நாள் கலந்தாய்வை வைத்து, எதையும் கூற முடியாது. வரும் நாட்களில், மாணவர்கள், வேறு பாடப் பிரிவை தேர்வு செய்யலாம்,'' என்றார்.கலந்தாய்வு நிகழ்ச்சியில், பல்கலை துணைவேந்தர், ராஜாராம், பதிவாளர் கணேசன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.தேர்வு செய்ததுஏன்? மாணவி, ஹரிதா கூறுகையில், ''சிறிய வயதில் இருந்தே, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்றால், எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், பொறியியலில், இந்த பாடப் பிரிவை தேர்வு செய்தேன். அதுவும், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தால் நல்லது என, பலரும் கூறினர். அதனால், இந்த கல்லூரியை தேர்வு செய்தேன்,'' என்றார். மொத்த இடங்கள் முழு விவரம் கல்லூரிகள் கல்லூரிகள் மொத்த கலந்தாய்வு எண்ணிக்கை இடங்கள் இடங்கள் அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகள் 26 11,85011,850 அரசு உதவி பெறும் கல்லூரிகள் 3 2,800 2,223தனியார் கல்லூரிகள் 501 2,72,236 1,67,323 மத்திய கல்லூரிகள் 2 160 155 புதிய தனியார் கல்லூரிகள் 2 600 390 மொத்த கல்லூரிகள் 534 2,87,646 1,81,941 தனியார் கல்லூரிகள், கலந்தாய்வுக்கு, 28,712 இடங்களை, தானாக முன்வந்து வழங்கி உள்ளன.
இதையும் சேர்த்து, 2,10,653 இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. டாப் - 10 மாணவர்கள் *ஹரிதா, திண்டுக்கல்/கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி பொறியியல் கல்லூரி *பிரபு, திருப்பூர்/கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி பொறியியல் கல்லூரி *ரவிசங்கர், கோவை/எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், பி.எஸ்.ஜி., கல்லூரி கோவை *விஷ்ணுபிரியா, ஈரோடு/கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி பொறியியல் கல்லூரி *ராமு, வேலூர்/கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி பொறியியல் கல்லூரி *சூரிய மல்லிகராஜ், பெருந்துறை, ஈரோடு/மெக்கானிக்கல், கிண்டி பொறியியல் கல்லூரி *பிரதிக் ஷா, திருவண்ணாமலை/கம்ப்யூட்டர் சயின்ஸ், கிண்டி பொறியியல் கல்லூரி*ராகுல் பாலாஜி, கோவை/எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்,பி.எஸ்.ஜி., கல்லூரி, கோவை *தர்ஷினி மீனா, கோவை/எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், பி.எஸ்.ஜி., கல்லூரி, கோவை *யோகராஜ், குமாரபாளையம், ஈரோடு/மெக்கானிக்கல், பி.எஸ்.ஜி., கல்லூரி, கோவை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி