பல்லடம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கப்பட்டுள்ளது.
பல்லடம் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பள்ளிக்கு வந்து செல்ல இலவச வேன் வசதி துவங்கப்பட்டுள்ளது.இதன் துவக்கவிழா, ரோட்டரி சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவி, நாற்காலி, மேஜை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பல்லடம் கிளை சார்பில் வழங்கப்பட்ட கணினி மற்றும் நகல் எடுக்கும் இயந்திரம் ஆகியவை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பல்லடம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் எம்.கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். விழாவில், இலவச வேன் வசதியை துவக்கி வைத்து . பள்ளிக்கான தளவாட பொருள்களை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம் வழங்கினார். பல்லடம் நகராட்சித் தலைவர் பி.ஏ.சேகர், நகராட்சி ஆணையாளர் நாராயணன், தலைமை ஆசிரியர் ஆனந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி