மக்களிடம் நம்பிக்கை இழந்துள்ள அரசு பள்ளிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2014

மக்களிடம் நம்பிக்கை இழந்துள்ள அரசு பள்ளிகள்.


அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது.
சில ஆண்டுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்குஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் மாணவ, மாணவியர் சேர்க்கை சொல்லி கொள்ளும்படி இல்லை.

அடித்தட்டு மக்களுக்கும் தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்ற மோகம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூட அரசு பள்ளிகளின் கற்பித்தல் திறனை நம்பி தங்களது பிள்ளைகளை சேர்ப்பதில்லை.இவ்வாறு பலரும் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் கடந்த 7ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை கடுமையாக குறைந்து வருகிறது. சில ஆண்டுகளில்அரசின் துவக்க பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்பதை விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின்புள்ளி விவரம் உணர்த்துகிறது.

2 comments:

  1. தான் நலமாக வாழ, அரசு பணி தேடும் ஆசிரியர்கள்...தனது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள் ..இதில் எவ்வளவு சுயநலம் உள்ளது...வெட்கக் கேடாக உள்ளது இதை நினைக்கும் பொழுது.......இவர்களை என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி