25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி அரசு ஆணை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கோரியுள்ளது.
சனிக்கிழமை யன்று காலை திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி யில் நடந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். மாநில தலைமைச் செய லாளர் வெங்கடேசன்,மாநில அமைப்பு செயலா ளர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதழ் அறிக்கையை துணைப்பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், வரவு- செலவு அறிக்கையை மாநில பொருளாளர் மதலை முத்து, வேலையறிக்கையை பொதுச்செயலாளர் இசக் கியப்பன் ஆகியோர் சமர்ப் பித்தனர்.
அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளி நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களை தமி ழக அரசு வரும் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கை யில் பட்டதாரி ஆசிரியர்க ளாக உட் படுத்தி ஆணை வழங்கவேண்டும், இடை நிலை ஆசிரியர்களின் சாதாரணநிலை ஊதியத்தை 5,200 - 2,200 தரஊதியம் 2800 என்பதை மாற்றி ஊதியக் கட்டு 2ல் வைத்து 930 - 30,800 தர ஊதியம் 4,200 என மாற்றி அறிவித்திட தமிழக முதல் வரை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.முன்னதாக திருச்சி மாவட்டச் செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் மாநில இணை செயலாளர் ஸ்டீபன் நன்றிகூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி