்மருத்துவ இருட்டறை உதவியாளர் பணியிடத்திற்கு பதிவு மூப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மகாராணி கூறியதாவது:
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட இருட்டறை உதவியாளர் பணியிடத்திற்கு மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடத்திற்கு பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சியுடன் இருட்டறை உதவியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஓராண்டு ரேடியாலஜிக்கல் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.2013 ஜூலை 1ல் பொதுப் பிரிவினர் எனில் 30 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் - அருந்ததியினர், பழங்குடியினர் எனில் 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் - இதரர், பிற்படுத்தப்பட்டோர் - முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனில் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பரிந்துரை விபரம்:
2014 ஜூன் 28 வரை பதிவு செய்துள்ள அனைத்து வகுப்புகளை சேர்ந்த முன்னுரிமை பிரிவினர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர்-அருந்ததியினர் பெண்களுக்கு 2012 டிச.17 வரையும், மிகவும் பிற்பட்டோர் இருபாலருக்கு 2010 மார்ச் 1 வரையும், பிற்படுத்தப்பட்ட-முஸ்லிம் பெண்களுக்கு 2009 செப்.24 வரையும், இருபாலருக்கு 2007 செப்.3 வரையும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட-இதரர் பிரிவில் இருபாலருக்கு 2005 பிப்.22 வரையும், பொது பிரிவினர் இருபாலருக்கு 2007 அக்.12 வரையும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.தகுதியுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்வி சான்றுகளுடன் நாளை (ஜூலை 10)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவுமூப்பு விபரத்தை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி