Mobile Application மூலம் வகுப்புகளில் மாணவர்களின்கவனத்தை கணிக்கும் முறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2014

Mobile Application மூலம் வகுப்புகளில் மாணவர்களின்கவனத்தை கணிக்கும் முறை


மொபைல் ஆப் (செயலி) மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எப்படி செயல்படுகிறது?

மாணவர்களுக்கு ஆசிரியர் வகுப்பெடுக்கும்போது மற்று மொரு ஆசிரியர் வகுப்பறையில் இருப்பார். அவர் மாணவர்கள் அமர்ந்திருக்கும் முறை, அவர்களது உடல் மொழி, முக பாவனைகள், உள்ளிட்டவைகளை ஹார்ட் HART- (Human Affect Recording Technology) எனப்படும் கைப்பேசி ஆப்-ல் பதிவிடுவார்.ஒரு பருவத்துக்கு ஒரு பாடத்துக்கு மூன்று முறை ஆசிரியர் இதனை பதிவிடுவார். இந்த தகவல்களைக் கொண்டு மாணவர்களின் செயல்பாடுகளை கணிக்க கொலம்பியா ஆசிரியர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவல்லுநர் ரயன் பேக்கர் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளார். இது ப்ராம்ப் ப்ரோடாக்கால் (BROMP-Baker Rodrigo Observation Method Protocol) என்றழைக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக 50 மாநகராட்சி ஆசிரியர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு பயிற்சி வகுப்புகள் முடிந்துள்ளன. இறுதிகட்ட வகுப்புகள் முடிந்த பிறகு இந்த ஆசிரியர்களுக்கு ப்ராம்ப் சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் வழங்கப்படும். அதன் பிறகே அவர்கள் மாணவர்களை கணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆசிரியர்களுக்கு ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.இந்த திட்டம் க்வெட் - என்ற தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. க்வெட் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு துணைத் தலைவர் உமா மகேஷ் கூறுகையில், "யார் வேண்டுமானாலும் மாணவர்களை கணித்து விட முடியாது.மிக நுட்பமாக அவர்களை கவனித்தால் மட்டுமே சரியான முடிவுகள் கிடக்கும் என்பதால், இது குறித்து ஆசிரியர் களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

வகுப்புகளிலிருந்து கிடைக் கும் தகவல்கள் கொலம்பியா வில் உள்ள ஆசிரியர் பல்கலை கழகத்துக்கு அனுப்பப்படும். அவர்கள் எந்தவித மாற்றங்களை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள்," என்றார்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, "ஒரு மாணவர் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் தொடர்ந்து குறைவான மதிப்பெண் எடுத்தால், அவர் பள்ளியை விட்டு நிற்பதற்கு வாய்ப்புகள்அதிகம் என்று கூறப்படுகிறது.இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாணவரும் எந்தெந்த பாடங்களில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்று தெரிவதால், அவர்கள் பள்ளியை விட்டு நிற்காமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்யப்படும்," என்றார்.

1 comment:

  1. there is no need additional teacher in this tenure already so many vacants, pls set that android cell in fixed wall fitting and connect with 3G GSM or CDMA and take live video and record in centrailised Computer system please try this method because already so many student affected by lack of teachers. please any body convay this message concerned authority please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி