10, 12ம் வகுப்பு காலாண்டு தேர்வை முழு ஆண்டு தேர்வு போல் நடத்த வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

10, 12ம் வகுப்பு காலாண்டு தேர்வை முழு ஆண்டு தேர்வு போல் நடத்த வேண்டும்.


10, 12ம் வகுப்பு மாணவர்களின் உண்மை யான பாட அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வினை முழு ஆண்டு தேர்வு போல நடத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள் ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பிற்குசெப்.17ம் தேதி முதல் 26ம் தேதி வரை தேர்வு நடைபெறும். பிளஸ்2 வகுப்புகளுக்கு செப்.15ல் துவங்கி செப். 26ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் இத்தேர்வை ஆண்டிறுதி தேர்வு போல் நடத்த வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.ஒரு அறைக்கு 20 மாணவ, மாணவியர் வீதம் தேர்வெழுத தேர்வறையை ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வறை ஒன்றுக்கு ஒரு அறை கண்காணிப்பாளர்வீதம் நியமனம் செய்யப்பட வேண்டும்.

எந்த பாடத்திற்கு தேர்வு நடைபெறுகிறதோ? அந்த பாட ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.அரசு பொதுத்தேர்வு போல, மாணவர்களின் உண்மையான பாட அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பாட தேர்வுகள் முடிந்த உடன் விடைத்தாள்களை 3 நாட்களுக்குள் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டின் அடிப்படையில் திருத்திட வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை உடனடியாக மாணவர்களிடம் அளித்து சரிபார்த்த பின்னர் மாணவர்களின் மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. இடைநிலை ஆசிரியராக தேர்வான jailani basha நண்பருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ சார்,நாளை ஏதேனும் அறிவிப்பு உள்ளதா?

      Delete
    2. தெரிந்தால் உடனே சொல்கிறேன்...

      Delete
  2. ஸ்ரீ சார்.நாளை, ஏதேனும் அறிவிப்பு உள்ளதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி