டிஎன்பிஎஸ்சி தேர்வு விவகாரம்: 83 பேர் பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

டிஎன்பிஎஸ்சி தேர்வு விவகாரம்: 83 பேர் பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி


நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள் 83பேர் பணியில் தொடரலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2001இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு செய்து 83 பேர் 2005 இல் பணி நியமனம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் பணி நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ரோத்தஹி தேர்வர்கள் குறியீடுகளை பயன்படுத்தவில்லை என்று விடைத்தாளை சுட்டிக்காட்டி விளக்கினார். இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி, மனுதாரர்கள் ஏபி நடராஜன், மாதவன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால், உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை அவர்கள்பணியில் தொடரலாம் என்று உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி