இக்னோ எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

இக்னோ எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது.


மதுரை இக்னோ மண்டல மைய இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளதாவது:இக்னோவின் 2015ம் ஆண்டு எம்.பி.ஏ., எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது.
மதுரை மண்டலத்தில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, சாத்துார், தேவகோட்டை,உத்தமபாளையம், ராமநாதபுரம் ஆகிய 10 மையங்களில் 4,800 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான நுழைவு சீட்டு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இக்னோவின் இணையதளம் மூலம் மாணவர் பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0452- 238 0733 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

    * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

    நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
    உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
    * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

    * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
    சேம்பர் எண் : 222

    வழக்கறிஞர் திரு .சங்கரன்
    சேம்பர் எண்: 354

    வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
    வழக்கறிஞர் திரு நமோ.நாராயணன்

    மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
    நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
    திரு. கருப்பையா 9942342608.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி