ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000 பேர் தாற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

அடுத்த கட்டமாக, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை கவன ஈர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பேரணியின் முடிவில் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கவுள்ளோம் .

30 comments:

  1. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோரிக்கை வைக்கின்றனர்....
    9000 பேர் இடம் பெறாமைக்கு காரணம் குறைவான காலிப்பணியிடமே...எப்படியோ வாழ்த்துக்கள் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. .

      வாழ்த்துக்கள் .நானும் கலந்து கொள்கிறேன்.

      .

      Delete
  2. மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் : மத்திய அரசுக்கு கோரிக்கை


    தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆவின் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை அவரிடம் அளித்தனர். இந்த மனுவை பிரதமர் நரேந்திரமோடியிடம் சேர்க்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
    அந்த மனுவில், ‘ரெயில்களில் இ-டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியினை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் உதவியாளருக்கும் விரைவில் வழங்க வேண்டும், விமான போக்குவரத்தில் 50 சதவீத பயண கட்டண சலுகை, புதிய உரிமை பாதுகாப்பு சட்டத்தை தகுந்த திருந்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும், வருமானவரி செலுத்துவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

    நன்றி :
    பாடசாலை.

    ReplyDelete
  3. Sri sir today bt 2 nd list varuma sir tamil mattum vittutu irukkanga other subjectlam eppo sir viduvanga

    ReplyDelete
  4. Sri sir today bt 2 nd list varuma sir tamil mattum vittutu irukkanga other subjectlam eppo sir viduvanga

    ReplyDelete
  5. Sri sir today bt 2 nd list varuma sir tamil mattum vittutu irukkanga other subjectlam eppo sir viduvanga

    ReplyDelete
  6. Sri sir today bt 2 nd list varuma sir tamil mattum vittutu irukkanga other subjectlam eppo sir viduvanga

    ReplyDelete
  7. viraivil amma thalai itta than nalla thervu kidaikum

    ReplyDelete
  8. All friends iniyavadhu sep 1 porattathil niraya per kalanthukolla vendukiren idhu namma life varungal nanbargale kai kodungal porattam vettri adaiya

    ReplyDelete
  9. TODAY PAPER 1 SELECTION LIST IS

    EXPECTED.

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்பட்டியல் அனைத்தும் வெளியான பிறகே இடைநிலை ஆசிரியர் பட்டியல் வரும் என்று நினைக்கிறன். ஏனென்றால் BT இல் தேர்வானவர்களை இடைநிலை ஆசிரியர் பட்டியலில் இருந்து முழுவதுமாக நீக்கவேண்டுமல்லவா..

      Delete
    2. திரு ராஜலிங்கம் சார் அவர்களை தொடர்பு கொண்டு தொலைபேசியில் போராட்டம் பற்றி கேட்டதற்கு அவர் பதில்

      இன்று 8 வது நாளாக நடைபெற்ற போராட்ம் முடிவு பெற்று தறகாலிகமாக போராட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக சொன்னார்

      மேலும் செப்டம்பர் 1 அன்று மாபெரும் பேரணி நடைபெற இருப்பதாக சொன்னார்
      இந்த பேரணியில் பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுதிறனாளிகள் இந்திய மாணவர்கள் சங்கம் என பல்வேறுபட்ட சங்கங்கள் கலந்து கொள்வதாக கூறினார்

      திரு ராஜலிங்கம் அவர்கள் கூறியது

      Delete
  10. தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனம் இருக்கவேண்டும் என்றும் சில பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களது வாதப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை மறுமடியும் எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்றாலும் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் போன்றவற்றை மீண்டும் எழுத முடியாத சூழல் உள்ளதால் வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுவது எப்போதுமே இயலாத காரியம். இதனால் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை. எனவேதான் வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்று போராடுகின்றனர்.
    பிளஸ்டூ பாடத்திட்டம் தற்போதுள்ள முறை வேறு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. தற்போது கல்வி பயில உள்ள வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. தொழிற்கல்வி பாடம் படிக்கும் பிளஸ்டூ மாணவனுக்கு செய்முறை மதிப்பெண்கள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆனால் ஏ குரூப் எனும், கணிதம், உயிரியல்,இயற்பியல், வேதியியல் பாடம் படித்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்ணைத்தான் பெற முடியும். இரு பிரிவு மாணவர்களையும் சம அளவு கோலில் பார்க்கக்கூடாது எனவும் தேர்வர்கள் கூறுகின்றனர்.
    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிந்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள் தற்போது படித்து தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுடன் எவ்வாறு போட்டி போட இயலும்? எந்த ஒரு பணி நியமனத்திலும் இதுபோன்ற ஒரு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இந்த முரண்பாடு ஏன்? வேலைவாய்ப்பு பதிவு எதற்காக? வயது முதிர்வுக்கு சலுகை கிடையாதா? என்றும் தேர்வர்கள் கோருகின்றனர். என்சிடிஇ வழிகாட்டுதலில் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களை கணக்கெடுக்கும்படி கூறப்படவில்லை.



    தீர்வு என்ன?
    1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்ற உத்தரவாதத்தை அரசு அறிவிக்கவேண்டும்.
    2. மொத்த காலிப் பணியிடங்களை சரிபாதியாக பிரித்து முதல் பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மறு பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் 89 மதிப்பெண்களுக்குள் பெற்று தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களில் அதிக மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்..
    தாள் 1, தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பணியமர்த்தும்வரை இந்த முறை கடைப்பிடிக்கவேண்டும்.
    இவ்வாறு நடைமுறைப்படுத்துவதுதான் இரு சாராரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

    ReplyDelete
  11. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me

    ReplyDelete
  12. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir,

    ReplyDelete
  13. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir,

    ReplyDelete
  14. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir

    ReplyDelete
    Replies
    1. Ungaluku chance iruku sir. 64.24 thaan BC final cut off for ph so you may get. So wait for second list sir.

      Delete
  15. பட்டியலில் இடம்பெற்றவர்கள் பேரணி எப்போது

    ReplyDelete
  16. பட்டியலில் இடம்பெற்றவர்கள் பேரணி எப்போது

    ReplyDelete
  17. anbarasu sir neengalum last 2 montha amma parthukkuvanga parthukkuvanganu solringa but onnum nadaka matenguthu nan ungala thappu sollala govermenta soldran dont mind my comments

    ReplyDelete
  18. eppa neenga CM AMMA veeda mutrukai ida mutarchi panningalo appave theinji pochu

    ReplyDelete
  19. mark vise posting poda soltringa, apadina unga kooda poradum 90 to 95 mark ethuvangaloda nilamai?

    ReplyDelete
    Replies
    1. Aadu nanayuthyenu onaai kalaipattatham, athiga mathippen eduthavaragalukku vaippu endra adippadai theriyatha tharkurigal alla nangal,thannai vida kuraintha mathippen eduthavar thanathu vaippai parippathal than ippothu intha porattam, unga kulla narithanam inga edupadathu.

      Delete
    2. My name amutha.paper1.TET mark 97. My husband army.pona TETla army piriority
      yeduthanga bt yindha time posting kuraivala yedhuvum yeduthukala. naatukaga uyir
      kuda porutpaduthama mazhai veilkuda parkama naatuga vuzhaikiranga. yethanaiyo per thangaludaiya uyirai nattukaga vittu erukkanga.yeththanaiyo naattugaga thiyagam seira avargalukaga tamizhaga arasu munnurimai kodukka kudathanu kettu case pottu porada poren.so please yenna madhiri yirukkira army wifes and ex-army priority persons please mun vandhu yankuda join pannunga.ondru serndhu poradi vettri kanpom.monday case poda porom.pls conduct; 7373424923

      Delete
    3. PLEASE CONTACT ARMY QUOTA PAPER1 CANDIDATE .PRIORITY QOUTA PURPOSE CELL:7373424923

      Delete
  20. relaxation kudukka sonna Prince Gajendra Babu kettavar? athe Prince Gajendra Babu weightage system matha sonna avar nallavar? nalla irukku unga nayam

    ReplyDelete
  21. TET MARK Padi posting pottal govt. 5% kuraichathukku arththam illamal poidum la next avanga porattama

    ReplyDelete
  22. செப்டம்பர் 1. திங்கள்கிழமை.நம்பிக்கையோடு இருங்கள்.வெற்றி வெகு அருகில்!நம்பிக்கை உயர்வைத்தரும்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி