குரூப் 2 தேர்வு ரிசல்ட் 15 நாளில் வெளியீடு - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

குரூப் 2 தேர்வு ரிசல்ட் 15 நாளில் வெளியீடு - தினகரன்


குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணி யன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) செ. பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டக்கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும். இப்பதவிக்கான தேர்வு அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் 9 மையங்களில் நடைபெறும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க செப். 21ம் தேதி கடைசி நாள். மேலும் இப்பதவிக்கு விண் ணப்பிப்பதற்கான வழிமுறை மற்றும் விவரங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அனைத்து பணிகளும் 4 மாதத்தில் முடிக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டக்கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணைய வழியில்மட்டுமே அனுப்ப வேண்டும். இப்பதவிக்கான தேர்வு அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் 9 மையங்களில் நடைபெறும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க செப். 21ம் தேதி கடைசி நாள். மேலும் இப்பதவிக்கு விண் ணப்பிப்பதற்கான வழிமுறை மற்றும் விவரங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அனைத்து பணிகளும் 4 மாதத்தில் முடிக்கப்படும்.

குரூப் 2 தேர்வில் அடங்கிய துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் (கிரேடு&2), சிறை துறை நன்னடத்தை அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் அதிகாரி, உதவி தனி அலுவலர், ஆடிட் இன்ஸ்பெக்டர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவி யாளர், உள் ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 1,064 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 6.65 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15 அல்லது 20 நாட்களில் வெளியிட துரித நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ. பதவியில் 2,342 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 2 மாதத்தில் வெளியிடப்படும்.

உதவிக் கால்நடை மருத்துவர் பதவியில் சுமார் 686 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு தகுதி தேர்வு மற்றும் சுமார் 315 காலியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். குரூப் 4 பதவியில் அடங்கிய சுமார் 3,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.

பாலசுப்பிரமணியன்

1 comment:

  1. BEST WISHES TO ALL P.G.

    CANDIDATES !!

    PLEASE COMMUNICATE

    COUNSELLING UPDATES TO US !!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி